விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள்

(விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.
குறுக்கு வழி:
WP:EL


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


விக்கிப்பீடியா கட்டுரைகளின் இறுதியில் கட்டுரைக்கு தொடர்புடைய பிற வலைத்தளங்களுக்கு இணைப்பு தரலாம். அவ்வாறு தரும் போது கவனத்தில் கொள்ள வேண்டியன:

  1. தரப்படும் வெளியிணைப்பு தரமான, பயனுடைய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
  2. நீண்ட நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கக் கூடிய பக்கங்களை இணைக்கலாம்.
  3. ஓர் இணைப்பு, மேற்கோள்களிலோ உசாத்துணைகளிலோ ஏற்கனவே இடம் பெற்றிருந்தால், மீண்டும் அதை வெளி இணைப்புகளில் தரக்கூடாது.
  4. பதிப்புரிமை மீறியிருக்கக் கூடிய பக்கங்களுக்கு இணைப்பு தரக்கூடாது.
  5. எரித இணைப்புகளையும், நச்சு நிரல் கொண்ட பக்கங்களையும் இணைக்கக் கூடாது.
  6. ஒரு பயனர் தனது சொந்த அல்லது தான் தொடர்புபட்ட வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது.
  7. வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது. எ. கா. சிம்லா கட்டுரையில் ஒரு பயண முகமையின் தளத்தை இணைத்தல்.
  8. ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
  9. மேற்கோள்கள், உசாத்துணைகள் போன்ற கட்டுரையின் இதர பகுதிகளிலும் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு புத்தக்கத்தை மேற்கோளாகத் தருவது என்றால் அதன் பெயர், ISBN விவரங்கள் தந்தால் போதும். அதனை விற்கும் தளத்துக்கு இணைப்பு தர வேண்டியதில்லை.