பேச்சு:ச. வெ. இராமன்

ச. வெ. இராமன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரை

தொகு

article to be merged சந்திரசேகர வெங்கட ராமன்--ரவி 08:59, 30 மே 2006 (UTC)Reply

ஒருவரைப் பற்றி குறுங்கட்டுரை எழுதும் பொழுது, முதலில் அவர் பிறந்த இறந்த ஆண்டுகளை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது (பின்னர் கட்டுரையில் பிறந்த நாள், மாதம் முதலியன துல்லியமான செய்திகளைக் குறிப்பிடலாம். அதே போல, பிறந்த இடமும் கட்டுரையில் இருக்க வேண்டும், முதலில் பெயருடன் இருக்கத் தேவை இல்லை. காரணம் என்னவெனில், இவை பெயரோடு ஒட்டிகொண்டிருப்பதால் ஒரு குறுங்கட்டுரையைத் தொடங்கிப் படிக்கும் முன் இடையூராக உள்ளன (உடனே தேவைப்படாத குறிப்புகள்). முதலில் எளிமையாகத் தொடங்க வேண்டும், பின்னர் சற்று செறிவான அல்லது துல்லியமான செய்திகள் இருக்க வேண்டும். படிப்பவர், எளிதாகத் தொடங்கி, மேலும் படிக்கத் தூண்டப்படவேண்டும். தொடக்கத்திலேயே தேவையற்ற செய்திகளைத் திணித்தல், படிப்போருக்குத் தடையாக இருக்கும். எண்ணிப் பாருங்கள். எனவே இவற்றைத் திருத்தி இருக்கிறேன். --C.R.Selvakumar 05:30, 4 ஜூன் 2006 (UTC)செல்வா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ச._வெ._இராமன்&oldid=3783975" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ச. வெ. இராமன்" page.