பேச்சு:ஜஸ்டின் துரூடோ

உள்ளூரில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் சொற்கூட்டலுக்கு தலைப்பு நகர்த்தல். --Natkeeran (பேச்சு) 14:06, 20 அக்டோபர் 2015 (UTC)Reply

ஆங்கிலேயரும் இவ்வாறுதான் பலுக்குகிறார்களா?--Kanags \உரையாடுக 20:04, 20 அக்டோபர் 2015 (UTC)Reply
@Natkeeran:, கனடிய ஊடகவியலாளர் குயின்ரஸ் துரைசிங்கத்தின் நேர்காணலின் படி ட்ரூடோ என்பதே கனடிய வழக்கு. டுரூடோ சரியானதே.--Kanags \உரையாடுக 09:16, 26 அக்டோபர் 2015 (UTC)Reply
@Kanags:, டுரூடோ என்பதற்கு விக்கியில் இருந்து மட்டுமே கூகிள் தேடல்கள் (7!) கிடைக்கின்றன. ரூடோ என்பதற்கு 1,810 தேடல்கள் கிடைக்கின்றன. மேலும் பெரும்பாலான கனடியத் தமிழ்ப் பத்திரிகைகளில் ரூடோ என்றே பயன்படுத்தப்படுகின்றது. --Natkeeran (பேச்சு) 13:47, 26 அக்டோபர் 2015 (UTC)Reply
எதற்காக அவ்வாறு எழுதுகிறார்கள்? ஆங்கிலேயக் கனடியர்கள் எவ்வாறு பலுக்குகிறார்கள்? டுரூடோ என்பது விக்கிப்படுத்தப்பட்ட சொல். ட் இல் தமிழ்ச் சொல் ஆரம்பிக்க முடியாது. இதனால் டுரூடோ என்று எழுதியிருக்கிறேன். ட்ரூடோ 1700 தேடல்கள் வருகின்றன. இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளில் ட்ரூடியூ என்றும் எழுதுகிறார்கள்.--Kanags \உரையாடுக 20:04, 26 அக்டோபர் 2015 (UTC)Reply
//விக்கிப்படுத்தப்பட்ட சொல்//???? தமிழ்ப்படுத்தப்பட்ட சொல்!!!--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:26, 27 அக்டோபர் 2015 (UTC)Reply
  • சசுட்டின் துரூடோ (ஒலிப்பு chasuttin turudoh அல்லது chastin trudoh குற்றியல் உகரங்களால்) என்பது பொருத்தமாகவிருக்கும். கிரந்தம் கலந்து எழுதலாம் என்றால் ஜஸ்ட்டின் துரூடோ என்று எழுதலாம். ஜஸ்ரின் (Jusrin) என்பது மிகவும் பிழையான ஒலிப்பு. யாழ்ப்பாணத்தமிழர்கள், tv என்பதை ரிவி என்கிறார்கள் என்பதை அறிவேன். இங்கே தமிழ் விக்கிப்பீடியாவிலும் நிறைய இது பற்றி உரையாடியிருக்கின்றோம். இப்படி சிதைத்து எழுதுவதால் கெடுதிகள் அதிகம்.இந்த ரகரத்தை நுனிநா பல்லண்ண ஆங்கில ஒலியாகிய t ஆக ஒலிப்பதாகக் கருதுவது மிக அண்மையில் ஏற்பட்ட சிதைவு வழக்கம். பல ஈழத்து முதியவர்களிடம் கேட்டிருக்கின்றேன். இதற்கான வரலாற்று சான்று ஏதும் கிடைக்கவில்லை. பொதுத்தமிழில் எழுதுவதே முறை. தமிழ்நாட்டிலும், பேச்சுவழக்குத் தமிழ் பலவிதமாக சிதைந்து இருக்கின்றது. அப்படியான தமிழில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவது முறையன்று. சசுட்டின் துரூடோ என்றோ வேறு சரியான முறையிலோ எழுத வேண்டுகின்றேன். //ஆங்கிலேயக் கனடியர்கள் எவ்வாறு பலுக்குகிறார்கள்? // கனடா என்னும் சொல்லையே பிரான்சியர் ஒருவாறும், ஆங்கிலேயர் ஒருவாறும்தான் ஒலிக்கின்றார்கள். நாம் நம் மொழியில் உகந்தவாறு ஒலிப்பதே சாலச் சிறந்தது. தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 20:07, 6 நவம்பர் 2015 (UTC) --செல்வா (பேச்சு) 01:43, 7 நவம்பர் 2015 (UTC)Reply
இயசுட்டின் துரூடோ என்பது என் பரிந்துரை.--Kanags \உரையாடுக 20:07, 8 நவம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜஸ்டின்_துரூடோ&oldid=2493592" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜஸ்டின் துரூடோ" page.