தகவற் பெட்டி உருவாக்கிட வேண்டுகோள் தொகு

இக்கட்டுரையிலும் இது போன்ற பிற கட்டுரைகளிலும் பயன்படுத்த "வார்ப்புரு:தகவற்சட்டம் இறையியலார்" என்றொரு வார்ப்புரு உருவாக்க தொழில்நுட்பம் தெரிந்தோரைக் கேட்டுக்கொள்கிறேன். வார்ப்புரு இல்லாததால் கட்டுரையில் தரப்பட்ட வார்ப்புருத் தகவல்கள் தெரியவுமில்லை, சிவப்பு இணைப்பு மட்டும் தான் தெரிகிறது. நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 17:24, 10 மே 2012 (UTC)Reply

வார்ப்புரு:Infobox theologian உருவாக்கப்பட்டுள்ளது.--மணியன் (பேச்சு) 23:09, 10 மே 2012 (UTC)Reply

உரைதிருத்தம் பற்றி உரையாடல் தொகு

  • மதனாகரன், இக்கட்டுரையை மிக்க கரிசனையோடு திருத்தியிருக்கிறீர்கள். உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். கட்டுரையின் தலைப்பு "ஜான் கால்வின்" என்று இருப்பதே சரி. பிரான்சியம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் "கால்வின்" என்னும் நெடில் ஒலிப்பையே கேட்கலாம். என்றாலும், கட்டுரை உருவாக்குவதற்காக விக்கி நிர்வாகிகள் கொடுத்த தலைப்பு "ஜான் கல்வின்" என்று குறிலில் இருந்ததால் அதை ஏன் மாற்ற வேண்டும் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டு, மாற்றுவழியாக "ஜான் கால்வின்" என்னும் சரியான ஒலிப்பைக் கொடுத்தேன்.

பல இடங்களில் சந்தி வரும்போது ஒற்று மிகும்படி திருத்தியிருக்கிறீர்கள். தமிழில் ஒற்று மிகாத இடங்கள் பல உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். தமிழுக்கு இயல்பாக இல்லாத சொற்கள் இவை: புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க, கிறித்தவ, ஜெனீவா....இச்சொற்களுக்குப் பின் வருகின்ற வல்லினங்களுக்கு ஒற்று இடாமல் இருப்பதே சிறப்பு.

மேலும், "சங்க காலம்" போன்று "இயக்க காலம்" என்பதில் தவறு இல்லை. "அங்குக் கல்வின்" என்பதில் கல்வின் (கால்வின்) ஓர் ஆள்பெயர். ஆதலால் ஒற்று வராதிருப்பதே சிறப்பு.

நீங்கள் ஆர்வத்தோடு செய்த திருத்தங்களை இல்லாது செய்வதற்கு முன்னால் உங்களோடு உரையாடுவது முறை என்று கருதினேன். உங்கள் விக்கிப் பணி சிறக்க!--பவுல்-Paul (பேச்சு) 03:09, 11 மே 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜான்_கால்வின்&oldid=1105859" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜான் கால்வின்" page.