பேச்சு:ஜிஷ்ணு ராகவன்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by செல்வா in topic தலைப்பு சிட்டுணு இராகவன்
தலைப்பு சிட்டுணு இராகவன்
தொகு"விஷ்ணு" என்பதை விட்டுணு என்றெழுதுவது தமிழில் மரபு. இதனை விண்ணு என்று எழுதுவது இன்னொரு மரபு. இராமகிருட்டிணன், விசுவநாதன், சீனிவாசன் என்று எழுதுவது போல கிரந்தம் இல்லாமல் எழுதுவது தமிழ் முறை. ழகரமும் தகரமும் ஆங்கிலத்தில் இல்லாததனால் Tamil என்றெழுதுகின்றார்கள். ஆனால் தமிழில் வேற்றுமொழி ஒலியன்களை எவ்வாறு தமிழில் வழங்குதல் வேண்டும் என்பதற்கு நெடிய மரபு உண்டு. இராமன், இரணியன். திருதராட்டிரன், தயரதன், இலக்குவன், இலட்சுமி, அனுமான் (அனுமன்), இமய மலை, இதயம் ("ஹ்ருதயம்" > இருதயம் > இதயம்). இப்படியாக எழுதுவது தமிழில் இயல்பாக இயைந்து ஒலிக்கும். எனவே இந்த நடிகரின் பெயரை முறையாக எழுத சிட்டுணு இராகவன் என்றோ சிண்ணு இராகவன் என்றோ எழுதப் பரிந்துரைக்கின்றேன். செல்வா (பேச்சு) 08:28, 9 அக்டோபர் 2023 (UTC)