பேச்சு:டார்சான்

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் டார்சான் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

==Untitled==

ஏன் டார்சான் (Tarzan) என எழுதாமல் டார்ஜான் என எழுதுகிறார்கள்? za எப்போதும் ஜ என தமிழக வழக்கில் எழுதப்படுகிறது. இது சரி தானா?--Kanags \உரையாடுக 10:43, 19 மே 2014 (UTC)Reply

z என்ற எழுத்திற்கு இணையாக ஜ என்ற எழுத்தை எல்லா இடங்களிலும் எடுத்துக் கொள்ள முடியாது. azarudeen என்பதை அசாருதீன் என்றே எழுதுகிறோம். nazimudeen என்பதை நசிமுதீன் என்று எழுதுகிறோம். நஜிமுதீன் என்றால் செயற்கையாக இருக்கும். அதைப் போல z என்ற எழுத்து சொல்லின் இடையில் வரும்பொழுது மென்மையாக ஒலிக்கும். இப்படி இடையில் வந்தால் ச என்ற எழுத்தை இட்டு எழுதுவதே தமிழக வழக்கம். ஜ என்று எழுதினால் செயற்கையாக இருக்கும், அப்படி எழுதுவதும் இல்லை. சிலர் z என்ற எழுத்திற்கு இணையாக ஸ என்ற எழுத்தைப் பயன்படுத்தியதும் உண்டு. ச என்ற எழுத்து sa என்ற ஒலிக்குப் பயன்படுத்துவதால், ஸ என்ற எழுத்தை za என்ற ஒலிக்குப் பயன்படுத்துவர். (கூடுதல் குறிப்பு: இப்படி வந்தால் மலையாளத்தில் ஸ என்ற எழுத்தை இட்டு எழுதுவர். ) -தமிழ்க்குரிசில் 08:32, 17 சூன் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டார்சான்&oldid=1806962" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டார்சான்" page.