பேச்சு:தங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடு

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by கி.மூர்த்தி
தங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இதனைத் தங்குதன் டை-குளோரைடு-டை-ஆக்சைடு என்றே எழுதலாம். முன்னொட்டு, இடையொட்டுகளாகிய டை, டிரை, பென்ட்டா, ஃகெக்சா.., போன்றவற்றை உள்வாங்கலாம். ஆனால் இவை தமிழில்தான் இருக்கவேண்டுமெனில் எனக்குப் பெரிய மறுப்பில்லை. தங்குதன் இரட்டைக்குளோரைடு ஈராக்சைடு என எழுத வேண்டியிருக்கலாம். இரட்டைக்குளோரைட்டீராக்சைடு என்று எழுதவேண்டும் என்றும் சிலர் புறப்படலாம். ஆனால் குளோரைடு வேறு குளோரைட்டு வேறு. அறிவியலில் புது மாதிரியான அமைப்பை நாம் ஏற்று தங்குதன் இரட்டைக்குளோரைடு ஈராக்சைடு என்றே எழுதலாம். தங்குதன் என்பதா தங்குசிட்டன் என்பதா, வுல்ஃபிரம் என்பதா என்பனையும் நினைத்துப்பார்க்கவேண்டும். டங்ஸ்ட்டன் எனச்சொல்லத்தேவையில்லை. அது தங்ஸ்ட்டன் என்பதைவிட நெருக்கமானதும் அன்று. தங்குதன் என்பது ஒரு வடிப்பு, தங்குசிட்டன் என்பது இன்னொரு வடிப்பு. தங்சிட்டன் என்பது சிறு குற்றமுடையதாயினும் இன்னொரு வடிப்பு. இப்பெயர்கள் சீரான முறையில் எழுதப்படாமல் இருப்பது நெருடலாகவே இருக்கின்றது. --செல்வா (பேச்சு) 17:18, 27 சூன் 2016 (UTC)Reply

விக்கித் திட்டம் தனிமங்கள், டங்க்ஸ்டனை தங்குதன் என்று வழிகாட்டியதால் தங்குதன் என்ற பெயரை நான் பயன்படுத்தினேன். டை, டிரை போன்ற முன்னொட்டுகளை உள்வாங்குவதை தமிழறிஞர்கள் ஒன்றுபட்டு விவாதிக்க வேண்டும். ஆனால் try = முக்குளோரைடு, முப்புளோரைடு, மூவாக்சைடு, முச்சல்பைடு, முக்கார்பனேட்டு, முந்நைட்ரேட்டு.....என்பதில் நம் மொழியின் சிறப்பும் புலப்படுகிறதே!--கி.மூர்த்தி (பேச்சு) 18:40, 27 சூன் 2016 (UTC)Reply
குளோரைட்டையும் (chloride) குளோரைட்டையும் (chlorite) உருபு புணர்ச்சியில் வேறுபடுத்திக் காட்டமுடியாது. இலங்கையில் குளோரைட்டு என்றால் அது chloride தான். குளோரைற்று என்பது தான் chloriteஐக் குறிக்கும். வழமையான முறைப்படி ஹெ-எ என இட்டுக் கிரந்தம் தவிர்த்தால், hexaஐயும் (6) exaஐயும் (1018) வேறுபடுத்தமுடியாது. இவ்வாறான இடங்களில் இலக்கணத்திற்குட்பட்ட மாற்றுவழிகளைக் கையாள்வது நன்று. ஹெ-கெ என்று பயன்படுத்தினால், இங்குச் சிக்கலில்லை (அவ்வாறு பயன்படுத்தப் பரிந்துரைக்கவில்லை. exa, hexa-இரண்டும் ஒரே கட்டுரையில் வருவது அரிது. ஓர் எடுத்துக்காட்டுக்காகக் கூறினேன்). ஏற்கனவே, தமிழ் மரபுக்கேற்ப, இலக்கணத்திற்குட்பட்டுத் திரிபடைந்து வழக்கிலுள்ள சொற்களுக்கு மாற்றாக மீண்டும் சொற்களைப் புதிதாகத் திரித்துப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் நன்று (பாஸ்கரன்-பாற்கரன் என வருதல் மரபு. பாசுகரன் எனத் திரித்தலைத் தவிர்க்கலாம்.). குளோரைடு, குளோரைட்டு என்ற பயன்பாடு உருபு புணர்ச்சியில் சிக்கலைத் தரும். dஐயும் tஐயும் வேறுபடுத்தத் தமிழ் இலக்கணத்தைக் கைவிடுதல் நன்றன்று. தமிழில் டுகர, றுகர ஈறுகளில் முடியும் சொற்களைக் கையாளும்போது கவனம் தேவை. இன்று பலர் தவறு + ஐ = தவறை, சாறு + ஐ = சாறை என்றவாறு எழுதுகின்றனர். இத்தவறுகள் தவிர்க்கப்படவேண்டியவை. பிறமொழிச் சொற்களையும் புணர்ச்சியில் டகரம் இரட்டிக்கும்படி எழுதுவது புதியதன்று. ரோட்டில், ரோட்டை, ரோட்டுக்கடை என்றெல்லாம் தமிழக, இலங்கை ஊடகங்கள் எழுதுவது கவனிக்கத்தக்கது. --மதனாகரன் (பேச்சு) 06:18, 28 சூன் 2016 (UTC)Reply
chlorite = குளோரைட்டு , chlorate = குளோரேட்டு, chloride: குளோரைடு என்று வேறுபடுத்திக் காட்டுவது சரியாகத்தானே இருக்கிறது.?--கி.மூர்த்தி (பேச்சு) 07:13, 28 சூன் 2016 (UTC)Reply
Return to "தங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடு" page.