பேச்சு:தண்டுவட மரப்பு நோய்
மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் என்பதை பல்திற காய்ப்பு அல்லது பல்திற தடிப்பு எனலாமா ?--மணியன் 13:12, 16 சூன் 2011 (UTC)
""தண்டுவட மரப்பு நோய்"" என TamilVu அகராதியில் தரப்பட்டுள்ளது. Raj --Thozhilnutpam 16:33, 24 சூன் 2011 (UTC)
- நன்றி ராஜ். வேறு யாருக்கும் மறுப்பு இல்லாவிடில் தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 01:16, 25 சூன் 2011 (UTC)
sclerosis என்னும் சொல் கிரேக்க மொழியில் σκληρός (கெட்டியாதல், இறுகுதல்,) என்னும் சொல்லில் இருந்து வந்தது. எனவே மரப்பு என்பது சரியாகவே படுகின்றது. ஆக்ஃசுபோர்டு அகரமுதலி "1879 R. N. Khory Digest Med. 111 This inflammation occurs in the liver or the kidneys where it is known as cirrhosis, when in the brain or cord, it is called sclerosis." என்று சுட்டுகின்றது. இதனை மூளைத்தண்டுவட மரப்பு என்றும் சொல்லவேண்டுமா அலல்து தண்டுவட மரப்பு என்று மட்டும் சொன்னால் போதுமா? எல்லா பொருள்களும் பொருந்தி வர வேண்டுவதில்லை. எந்தக் கலைச்சொல்லும் ஒரு தோராயக் குறிப்பே. விரிவான வரையறை அது குறித்து எழுதப்பட்டே அச்சொல் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படும் (எம்மொழியிலும் இது வழக்கு). தண்டுவட மரப்பு என்னும் பொழுது சட்டெனப் புரிகின்றது. --செல்வா (பேச்சு) 18:35, 6 மார்ச் 2012 (UTC)