பேச்சு:தனிமங்களின் எண் பட்டியல்
கட்டுரைப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதில் எனக்கு உடன்பாடுள்ளவற்றை அப்படியே விட்டுள்ளேன். ஈயம், தகரம், பொன் போன்று நாம் நெடுங்காலமாக பயன்படுத்தும் தனிமங்களுக்கு அப்பெயர்களையே தர வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தகுந்த இடங்களில் தமிழ்நாட்டு உரைநடை வழக்கை கருத்தில் கொண்டு எழுத்துக்கூட்டலில் சிறு மாற்றுப் பெயர்களை பரிந்துரைக்கிறேன். இலங்கை வழக்கு, தமிழ்நாட்டு வழக்கு இரண்டிலும் கட்டுரைத் தலைப்புகள் உருவாக்கப்பட்டு ஏதேனும் ஒரு பக்கத்திற்கு வழிமாற்றிவிடலாம். பொதுவாக அனைத்துத் தனிமப் பெயர்களின் எழுத்துக்கூட்டல்களிலும் எனக்கு உறுதியில்லை.இவற்றை தமிழ்நாட்டுப் பாடப்புத்தகங்களில் சரி பார்த்துச் சொல்லி யாரேனும் உதவ வேண்டும். இந்தப் பக்கத்தை சுட்டிக்காட்டியதற்கு நன்றி, நற்கீரன்.
- ஐதரசன் - ஹைட்ரஜன்
- காபன் - கார்பன்
- நைதரசன் - நைட்ரஜன்
- ஒட்சிசன் - ஆக்சிஜன்
- பொஸ்பரசு - பாஸ்பரஸ்
- கலசியம் - கால்சியம்
- நாகம் - துத்தநாகம் என்பதும் zinc என்பதும் வேறு வேறா?
- மொலிப்டெனம் - மாலிப்டினம்?
--ரவி 20:04, 27 டிசம்பர் 2005 (UTC)
இப்படியும் உச்சரிக்கலாமா?
தொகு- கைட்ரியன்
- ஒக்ஸ்சியன்
- கரிவாயு
- னைட்ரியன்
- பொஸ்பரஸ்
- கல்சியம்
--Natkeeran 20:12, 27 டிசம்பர் 2005 (UTC)
இலங்கையில்
தொகுஇலங்கையில் தனிமங்களை மூலகங்கள் என அழைப்பர் எனவே அதைப்பற்றியும் சிறிது கவனம் செலுத்தவும். வழிப்டுத்தல் போன்ற முறைகளை கையாள முடியாதா?--ஜெ.மயூரேசன் 02:50, 28 டிசம்பர் 2005 (UTC)
- வழிப்டுத்தல் என்றால் என்ன? ஆவர்த்தன அட்டவணை முறைப்படி பகுப்பதா? இனி இத்தலைப்பையும் தொட்டு பொதுவாக என் கருத்துக்களை சொல்கிறேன்.
- பொதுவாக தமிழ் பேசப்படும் முறை வெவ்வேறாக இருப்பினும் உரைநடை வழக்கில் தூய்மையும் ஒரே மாதிரியையும் பின்பற்றுவது தமிழ் மொழியின் குணமாக இருக்கிறது. எனினும், தமிழர் பல்வேறு தேசப்பகுதிகளில் சிதறி வாழும் போது இம்மாதிரி நவீன சொற்களிலும் எழுத்துக்கூட்டல்களிலும் ஒருங்கிணைப்பு இல்லாமல் போகிறது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு இரு நாட்டுத் தமிழரும் கலந்து பேசி அனைத்துலக்க் கலைச்சொற்களை இறுதியாக்குவது நேரம் எடுப்பதாகவும் முடிவில்லா process ஆகவும் இருக்கிறது. இதனைத் தவிர்க்க வருங்காலத்தில் UK English, US English என்பது போல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஈழத்தமிழ், தமிழ்நாட்டுத் தமிழ் என்பது போன்ற இரு வேறு எழுத்துக்கூட்டல் முறைமைகள், நாட்காட்டி முறைமைகள், கலைச்சொற்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? இது, ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைமை தானா என்பதில் தெளிவில்லை--ரவி 10:29, 28 டிசம்பர் 2005 (UTC)
தமிழ் மொழி ஒன்றாக இருப்பதே எமது பலம்.--ஜெ.மயூரேசன் 07:02, 29 டிசம்பர் 2005 (UTC)
நீக்கலாமா?
தொகுமிக விரிவாக தனிமங்களின் எண் பட்டியல் இருக்கிறது. இதனை நீக்கலாமா? --கோபி 18:53, 29 செப்டெம்பர் 2006 (UTC)
இதனை நீக்கிவிட்டு பக்க வரலாற்றை தனிமங்களின் எண் பட்டியல் உடன் இணைத்து, பேச்சுப்பக்கத்தை அதற்கு நகர்த்துவதில் எவருக்கேனும் ஆட்சேபனைகள் உண்டா? --கோபி 19:01, 29 செப்டெம்பர் 2006 (UTC)
இக்கட்டுரையை நீக்கிவிடலாம் என்பது என் கருத்து ஏனெனில் எற்கனவே மூன்று தனிமங்களின் பட்டியல் விரிவான குறிப்புகள் கொண்டு இருக்கின்றன. எனினும், இக்கட்டுரையில் உள்ள செய்திகளை (தமிழ்ப்பெயர்களை), பேச்சுப்பக்கத்தில் சேர்த்து வைக்கலாம். தனிமங்களில் பெயர்ப்பட்டியலை [இங்கே] பார்க்கலாம். தனிமங்களில் குறியெழுத்து வரிசையை [இங்கே] பார்க்கலாம். இவை தவிர தனிமங்களின் எண் பட்டியல் வேறு உள்ளது. --C.R.Selvakumar 19:38, 29 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
சில தமிழ்ப் பெயர்கள்
தொகு
- --Natkeeran 17:20, 14 மார்ச் 2009 (UTC)
முதன்மைப் பட்டியல் தேவை
தொகுList of elements என்பதற்கு ஈடான முதன்மைப் பட்டியல் ஒன்று தேவை. எனவே, இகட்டுரையின் தலைப்பை தனிமங்களின் பட்டியல் எனலாமா? எல்லா வகையிலும் வரிசைபடுத்திப் பார்க்கக்கூடிய விக்கி அட்டவணையைப் பயன்படுத்துவதன் மூலம் தனிமங்களின் பெயர்ப் பட்டியல், தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் எனத் தனித்தனியாக பட்டியல்களை இருப்பதைத் தவிர்க்கலாம்.--இரவி (பேச்சு) 11:53, 2 ஏப்ரல் 2012 (UTC)