பேச்சு:தன்னாட்சி உரிமை
இதன் தலைப்பு தன்னாண்மை உரிமை அல்லது தம்மாளுமை உரிமை என்று இருத்தல் பொருந்தும். தம்மைத் தாமே ஆளும் உரிமையப் பெற்றிருத்தல் தன்னாண்மை உரிமை அல்லது தம்மாளுமை உரிமை எனப்படும்.--செல்வா 22:23, 16 ஜூன் 2008 (UTC)
- சுயநிர்ணய உரிமை என்ற சொல்லே தற்போது ஈழத்தில் மிகவும் பரவலாக பயன்படும் வழக்கு. எனவே அதை எடுத்தாள்வதே நன்று என்று நினைக்கிறேன். உங்கள் குறிப்பையும் கட்டுரையில் சேர்க்கலாம். நன்றி. --Natkeeran 22:45, 16 ஜூன் 2008 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் தன்னுரிமை பற்றி உள்ள ஒரு கட்டுரையிலேயே தமிழ்ச்சொற்களால் எழுத உரிமை இல்லை எனில், அது கொடுமைதான் நற்கீரன் :) எது விருப்பமோ அப்படியே செய்யுங்கள். உங்கள் கருத்து விளங்குகின்றது. --செல்வா 23:14, 16 ஜூன் 2008 (UTC)
- செல்வா, ஈழத்தமிழர்கள் கூடிய சமஸ்கிரத சொற்களைப் பயன்படுத்துவது உண்மைதான். இது 50 களில் இந்திய மொழிகளுக்கு சமஸ்கிரத மூல கலைச்சொற்களை அமுலுக்கு வந்ததன் தாக்கம்தான். நாம் இப்பொழுதுதான் விடுபட தொடங்கி உள்ளோம். கொஞ்ச காலம் எடுக்கும். இந்த சொல் பல ஆவணங்களில் இருக்கும் சொல், ஈழத்து கதையாடால்களில்தான் கூடுதலாக புழங்கும் சொல். பிற பயனர்கள் கருத்துக்களையும் அறிந்து செயற்படலாம்.--Natkeeran 23:35, 16 ஜூன் 2008 (UTC)
- நற்கீரன், தமிழகத்தில் வழக்கில் இல்லாத பல நல்ல தமிழ்ச்சொற்களும் ஈழத்தில் பொது வழக்கில் உள்ளதையும் அறிவேன். மற்றபடி இந்தத் தலைப்பு ஈழம் குறித்தல்லாமல் பொதுத்தலைப்பாக இருப்பதாலும் இது பலருக்குப் (குறைந்தது எனக்கு!) புரியாத தலைப்பாக இருப்பதாலும் வழிமாற்றலாமென நினைக்கிறேன். கட்டுரைக்குள் கட்டாயம் ஈழவழக்கு பற்றி குறிப்பிடுவோம். உங்களுக்கும் பிற பயனர்களுக்கும் ஏற்பு இருந்தால் செய்யலாம். (என் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். ஈழத்தில் பொதுவழக்கு அல்லது தமிழ்நாட்டில் பொதுவழக்கு என்று நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. உண்மையில் சேரவழக்கில் ஒருவகை நாட்ட்மும் ஈழவழக்கு பல இடங்களில் நான் சார்ந்த தென்தமிழ்நாட்டுக் கடலோரப்பகுதிகளின் வட்டார வழக்கை ஒத்து இருப்பதாலும் சற்றே அவ்வழக்கின்பால் சார்பு உண்டு. மற்றபடி நல்ல தமிழ்ச்சொல் வெகு சிறிய அளவு மட்டுமே வழக்கூன்றியிருந்தாலும் அதை முதன்மைப்படுத்தி மற்றவற்றை கட்டுரையுள் குறிப்பிடுவதையே விரும்புகிறேன். சில இடங்களில் இதில் இசைந்து கொள்வேன்.) -- சுந்தர் \பேச்சு 04:15, 17 ஜூன் 2008 (UTC)
- நண்பர்களே, நிர்ணயம் என்பது தமிழ்ச் சொல் அல்லாதிருக்கலாம். ஆனால், தமிழகத்திலும் கூடச் சில இடங்களில் (பரவலாய் இல்லாதிருக்கலாம்) பயன்படுத்தப் படும் சொல் தான். காட்டுக்கு, எனது பதிவில் சென்று தேடிப்பார்த்தேன். குறைந்தபட்சம் ஆறு முறை நான் இதனைப் பாவித்திருக்கிறேன். (தனிமனித உரிமைகளின் எல்லைகள் என்பதை எப்படிச் நிர்ணயிப்பது?/ உங்களுக்கு என்று ஒரு உரிமை இருப்பதைப் போலத் தமிழ்மணம் என்கிற அமைப்பிற்கும் தனது கொள்கைகளை நிர்ணயித்துக் கொள்ளவும்.../ அந்த முகவரியை நிர்ணயிப்பதும், தரவுகளை எப்படிச் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து.../ சராசரியாய் ஒருவருக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நிர்ணயித்திருந்த காலம்.../). மற்றபடி, இங்கு என்ன பாவிப்பது என்பது குறித்து நான் கருத்தேதும் சொல்லவில்லை. :-) ==இரா.செல்வராசு 12:50, 17 ஜூன் 2008 (UTC)
Start a discussion about தன்னாட்சி உரிமை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தன்னாட்சி உரிமை.