பேச்சு:தமிழர் குறியீடுகள்

இக்குறியீடுகள் எதன் அடிப்படையில் தமிழர் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் குறிப்பிடல் நன்று. --Sivakumar \பேச்சு 12:27, 11 பெப்ரவரி 2007 (UTC)

இதில் குறிப்பிடப்படும் குறியீடுகளில் பல இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்துவது. சிவகுமார் குறிப்பிட்டது போல, இக்குறியீடுகள் சிறப்பாக எவ்வாறும் தமிழகர்களை சுட்டிகிறது என குறிப்பிட்டால் நன்று వినోద్  வினோத் 18:14, 21 மார்ச் 2008 (UTC)

அனேக தமிழர்கள் இந்தியர்களே, எனவே பல இந்தியர்களுக்கும் பொருந்தும் என்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. விளக்கங்களை அனைவரும் சேர்ந்து சேர்க்கலாம். --Natkeeran 18:50, 21 மார்ச் 2008 (UTC)

நற்கீரன் இப்படி தொகுப்பதற்கான கரணியங்கள் புரிந்து கொள்ளக்கூடியன. தமிழர்களின் அடிப்படைக் கூறுகளாக எவை எவை உள்ளன என்றும், அவை பற்றியெல்லாம் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்றும், நினைக்கிறார் என்று நினைக்கிறேன். இது நிறுவப்படாத புது ஆய்வு (OR) என்று விக்கியில் விலக்கவும் கோரலாம். ஆனால். நற்கீரனின் முயற்சி புதிய ஆய்வு அல்ல. எப்படி எல்லா விக்கிகளிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள் என்று ஒரு பட்டியல் உள்ளதோ, அதைப்போல, தமிழர்களின் அடிப்படைப் பண்பாட்டுக் கூறுகள், பண்பாட்டு "அணுக்கள்", பண்பாட்டு "செல்கள்" என்னென்ன ? அவை பற்றியெல்லாம் தமிழ் விக்கியில் கட்டுரைகள் உள்ளனவா என்று பார்க்கவும், அதனையே ஒரு பட்டியலாக ஒரு கட்டுரையில் இருக்குமாறும் செய்ய முனைந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் புரிந்து கொண்டது தவறாகக் கூட இருக்கலாம். என் கருத்தைப் பகிர்ந்துள்ளேன்.--செல்வா 19:16, 21 மார்ச் 2008 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான் செல்வா. வார்ப்புரு:தமிழர் தகவல்கள் என்ற பக்கத்திலேயே "தமிழர் இயல் தலைப்புகள் பட்டியல்" ஆக்கப்படுகிறது. இது அதன் ஒரு அங்கம். இதை கட்டுரைக்கான ஆய்வாகவே நான் பெரும்பாலும் பாக்கிறேன். பல கட்டுரைகள் எனக்கு எட்டியவாறு அணுகியிருக்கிறேன், அவை எந்த நோக்கிலும் பூரணமானவை அல்ல. அனேகம் ஒரு தொடக்கமே. என்னைப் பொறுத்த மட்டில் ஒரு தலைப்பில் சில தகவல்கள் இருப்பது சுழி தகவல்களை விட மேலே. தமிழர் பற்றிய கட்டுரைகளில் ஒரு positive bias இருக்கலாம். எனக்குரிதான சார்புகளும் இருக்கும். அதை சரி செய்ய மற்ற பயனர்கள் தகவல்களைச் சேர்க்கலாம்.


பண்பாடு போன்ற விடயங்களில் கனம் அதிகம் போன்று தென்படும். ஆனால் எல்லாவற்றையும் ஒரு வரையறை செய்ய முற்பட்டால் அவற்றின் எல்லைகள், முரண்கள் தென்படும். நீங்கள் சொன்னது போல பண்பாட்டு அணுக்கள் என்னவென்று பட்டியலிட்டால் எமது விழுமியங்களை பற்றி ஒரு தெளிவும், எமது எழிச்சிக்கும் தேக்கங்களுக்குமான காரணிகள் புலப்படும். இது ஒரு குறிகிய பார்வையாக நான் கருதவில்லை. மாறாக ஒவ்வொரு சராசரி தமிழருக்கும் இருக்க கூடிய கேள்விகளையே இங்கு கட்டுரைகளாக மலர வேண்டும் என்று எதிர்பாக்கிறேன்.

நீங்களு இயன்றால் தமிழர் இயல் தலைப்புகள் பட்டியலில் தலைப்புகளைச் சேருங்கள். நன்றி. --Natkeeran 03:45, 22 மார்ச் 2008 (UTC)

தமிழரை அடையாளப்படுத்தும் விடயங்கள் தொடர்பாகப் போதிய அளவு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. தமிழர் அடையாளங்கள் தொடர்பான நூல் ஒன்றைச் சென்னையில் ஒரு புத்தக நிலையத்தில் கண்டதாக ஞாபகம். நற்கீரன் குறிப்பிட்டுள்ளதுபோல் பல்வேறு இனங்கள் தங்களைப் பல்வேறு விடயங்களால் அடையாளப்படுத்திக் கொள்வதும், அவ்வினங்களைப் பிறர் சிலவற்றால் அடையாளம் காண்பதும் உண்டுதான். இவ்வாறான அடையாளங்களுக்கு மிகத் தெளிவாகப் புலப்படக்கூடிய காரணங்கள் இருக்கக்கூடும். சிலவற்றுக்கு அவ்வாறான காரணங்கள் தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக சேர, சோழ, பாண்டியருடைய சின்னங்களான வில், புலி, மீன் என்பவற்றைத் தமிழர் தமது அடையாளங்களாகக் கொள்வதற்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. இது போலவே வீரத்தைப் போற்றும் தன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர் மத்தியில் ஒரு பண்பாட்டுக் கூறாக இருந்து வருகிறது. தமிழர் தம்மை அடையாளப் படுத்திக்கொள்வதற்கு இந்தத் தன்மையைப் பயன்படுத்துவதை இலக்கியங்கள் மூலமும், மரபுவழிக் கதைகள் மூலமும் காணமுடியும். இது தொடர்பான கட்டுரை ஒன்றையும் சில காலங்களுக்கு முன் வாசித்துள்ளேன். இலங்கையின் தேசியக் கொடியில் தமிழரை அடையாளப்படுத்துவதற்கு சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இதற்கான அடிப்படை தெளிவில்லை. கோபுரம், திருக்குறள் போன்றவையும் பல இடங்களில் தமிழர் அடையாளச் சின்னங்களாகப் பயன்படுத்துவதையும் பார்க்கலாம். நிச்சயமாக இவற்றில் பலவற்றைப்பற்றி நல்ல கட்டுரைகள் எழுதமுடியும். தகவல்கள் உள்ளன ஆனால் பார்க்கும் கோணத்தை மாற்றி எழுதவேண்டியிருக்கும்.
இங்கு பட்டியலிடப்பட்டுள்ள சில தமிழருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல எனினும் அவை பற்றிய தமிழரின் நோக்கு தனித்துவமானவையாக இருக்கக்கூடும். சில ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழரையும் குறிக்காது ஒரு பகுதியினரை மட்டும் குறிக்கவும் கூடும். இவற்றை உரிய குறிப்புக்களுடன் பட்டியலிடலாம்.

மயூரநாதன் 05:37, 22 மார்ச் 2008 (UTC)

Start a discussion about தமிழர் குறியீடுகள்

Start a discussion
Return to "தமிழர் குறியீடுகள்" page.