பேச்சு:தமிழ்த்தாய் வாழ்த்து

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic பிற நாடுகளில்
தமிழ்த்தாய் வாழ்த்து என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பொருள் விளக்கம்

தொகு

பொருள் விளக்கம் அளிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். மக்கள் பேச்சு வழக்கில் இல்லாத சொற்கள் பொருள் விவரிக்கப்பட வேண்டும். வரிக்கு வரி பொருள் சொல்லவும் வேண்டும்.--Suresh jeevanandam 07:52, 12 நவம்பர் 2009 (UTC)Reply

இக்கட்டுரை முழுக்கப் பாடலை மட்டும் கொண்டுள்ளது. இப்பாடலை இயற்றியது, இதன் வரலாறு, எப்போது இது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, யாரால் போன்ற விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும். இல்லையேல் இது விக்கி மூலத்திற்கு மாற்றப்படும்.--Kanags \பேச்சு 09:45, 12 நவம்பர் 2009 (UTC)Reply

பிற நாடுகளில்

தொகு

வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் தமிழர் நிகழ்வுகளின் தொடக்கத்திலும் தமிழ்த் தாய்ப் பாட்டு பாடுவது வழமை. இத் தகவலையும் கட்டுரையில் தகுந்த மாதிரிச் சேர்க்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 18:48, 23 சூலை 2012 (UTC)Reply

இது நட்டுப்பண் அல்ல. அப்பகுப்பை நீக்கியுள்ளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:45, 26 சனவரி 2013 (UTC)Reply

விஜயராகவன் கருத்து

தொகு

"தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்" என அழைக்கப்படுவதின் பெயர் "தமிழ்த் தெய்வ வணக்கம்".

அதன் முழு வடிவம்

++++++++++++++=

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே


கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்

தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.

ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்

அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்

முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு

காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்

உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.

தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை

மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்

கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்

கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.

கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்

வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

+++++++++++++++++++++++++++++++++++++++


தமிழ்நாட்டு அதிகாரபூர்வமான கூட்டங்களில் முதல் பகுதிதான் பாடப்படுகிறது; ஏனெனில் மற்ற பகுதியின் கருத்துகள் சர்சைக்குள்ளாகும். உதாரணமாக "கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்" என்பது மற்ற தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிறந்தவை எனவாகும்- அதை மற்றைய மாநிலங்களில் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. இன்னோருதாரணமாக, சமஸ்கிருதம் முன்னால் உலகெங்கும் தமிழ் தான் பரவியிருந்தது என்கிறார்.("சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்") ச்மஸ்கிருதமோ தமிழோ எந்த காலத்திலேயும் "உலகமெல்லாம்" பரவினதாக யரும் நம்பவில்லை.

இந்த காரணங்களினால் முதல் பகுதிதான் பாடப்படுகிரது. இந்தியாவில் "சமயசார்ப்பற்ற" அரசியல் ஆதலால் "தெய்வ வணக்கம்" என்பதை "வாழ்த்துப் பாடல்" என்றழைக்கிரனர்.

இதையெல்லாம் கருதி, கட்டுரையை மாற்றினால் நன்று.--விஜயராகவன் 21:38, 5 மே 2007 (UTC)Reply

Return to "தமிழ்த்தாய் வாழ்த்து" page.