பேச்சு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல்

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல் என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வெறுமனே 4 கவிஞர்கள் குறித்த இணைப்புக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள இப்பக்கத்தை நீக்கலாம். ஆட்சேபணைகள் இருப்பின் தெரிவியுங்கள். --கோபி 17:38, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

மேலும் பெயர்களை சேர்க்கலாமா ? புருனோ மஸ்கரனாஸ் 18:11, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
பாடலாசிரியர்களின் பெயர்கள் மட்டும் காணப்படும் ஒரு பக்கம் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. ஏனெனில் பாடலாசிரியர்கள் பற்றிய பகுப்பில் இவர்கள் அனைவரதும் பெயர்கள் இருக்கும்தானே! மேலும் பல தகவல்களுடன் (உ-ம்:அட்டவணை) இப்பக்கத்தை வளர்த்தெடுக்க முடியும் எனத் தோன்றாததாலேயே நீக்கச் சிபாரிசு செய்தேன். தவறெனின் சுட்டிக் காட்டுங்கள். --கோபி 18:18, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
இவ்வாறு பொதுவான மேல்நிலை தலைப்பில் சேர்ப்பதை விட தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல் என்ற பக்கத்திற்கு நகர்த்தி விடலாம். --சிவகுமார் 18:21, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
அவர்களில் பலர் திரையிசை என்ற களத்தையும் தாண்டி இதர களங்களில் இயங்குபவர்கள்புருனோ மஸ்கரனாஸ் 18:29, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
குறைந்தது தமிழ்ப் பாடலாசிரியர்களின் பட்டியல் என்றாவது இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். --சிவகுமார் 18:32, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
கண்டிப்பாக.....தமிழ்ப் பாடலாசிரியர்களின் பட்டியல் என்ற பக்கத்திற்கு நகர்த்தி விடலாம். புருனோ மஸ்கரனாஸ் 18:49, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
அனைத்து பாடலாசிரியர்களுக்கும் தனி கட்டுரை எழுதுவதற்கு சில காலங்கள் ஆகலாம். ஒரு கட்டுரை உள்ள நபரின் பெயர் மட்டுமே பகுப்பில் வரும். பட்டியலில் அனைவரின் பெயரையும் சேர்க்க முடியும் என்ற காரண்த்தாலேயே பட்டியல் வேண்டும் என்று கூறினேன். புருனோ மஸ்கரனாஸ் 18:26, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
சரிதான். பட்டியற்படுத்துவதால் எவ்வெவ் பாடலாசிரியர்கள் பற்றிய கட்டுரைகள் உருவாக்கப்படவில்லை என்பதை அடையாளங் காணலாம். ஆனால் பாடலாசிரியர்களின் பட்டியல் என்பது பரந்ததாக உள்ளது. எல்லாவகையான பாடலாசிரியர்களையும் படியலிடுவது சாத்தித்யமில்லை. திரைப்படம் என்பதற்கு அப்பால் செயற்படுபவர்களென்றாலும் திரைப்படப் பாடலாசிரியர்கள் என்ற வகைக்குள் அடங்குபவ்வர்கள் என்பதால் தமிழ்ப் பாடலாசிரியர்களின் பட்டியல் என்னும் பக்கத்துக்கு நகர்த்துவது நல்லது. --கோபி 18:35, 23 ஆகஸ்ட் 2006 (UTC)


தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழ் சமுதாயத்தில் பங்கு பெற்ற பாடலாசிரியர்களின் பட்டியல் என்ற வரியை மாற்றி எழுதியுள்ளேன். எல்லா பாடலாசிரியர்களும் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் சமூக வளர்ச்சிக்கும் உழைத்தனர் என பொத்தாம் பொதுவாக கூற முடியாது--ரவி 23:03, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல்

Start a discussion
Return to "தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல்" page.