பேச்சு:தமிழ்ப் பிராமணர்கள்

நற்கீரன், உங்கள் கட்டுரையில் பல செய்திகள் குழப்பம் ஏற்படுத்தக்கூடியவை. (1) அந்தணர்கள் என்போர் ஒரு சாதியினர் அல்லர். சான்றோர் என்பது போல அந்தணர் என்பவர் நல்லவர், உயர் ஒழுக்கம் உடையவர், அன்புடையவர் என்றே பொருள். அந்தணர் என்போர் அறவோர் என்று திருவள்ளுவர் கூறுவதும் நோக்குங்கள். எடுத்துக்காட்டுக்கு இராமலிங்க அடிகள் ஓர் அந்தணர் (இவர் பிராமணர் அல்லர்), இரமண மகரிஷி ஓர் அந்தணர் (இவர் பிராம்ண சாதியில் பிறந்தவர்). எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் நல்லவர்கள், உயர் ஒழுக்கம் கொண்டவர்கள் அந்தணர்கள். (2) சமய குருமார்களில் மிகச் சிறு பான்மையினரே பிராமணர்கள், பெரும்பாலான சமய குருமார்கள் பிராமணர் அல்லாதார். (3) கட்டுரைத் தலைப்பை தமிழ்ப் பிராமணர்கள் என்று மாற்றலாம். அந்தணர், சான்றோர், சால்புடையோர், நல்லவர், மேலோர் (மேன்மையான நல்லொழுக்கங்கள் கொண்டோர்) என்பன பொதுச் சொற்கள். இவைகளை சாதியுடன் தொடர்பு படுத்துவது தவறு. பல பிராம்ணர்கள் அந்தணர்களாகப் போற்றப்பட்டிருக்கலாம், ஆனால் அந்தணர்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்லர். பிராமணர்கள் எல்லோரும் அந்தணர்கள் அல்லர். --செல்வா 22:06, 7 ஏப்ரல் 2007 (UTC)

விளக்கத்தக்கு நன்றி. கட்டுரையை விரைவில் மாற்றிவிடுகிறேன். --Natkeeran 12:26, 18 ஏப்ரல் 2007 (UTC)

IMHO, This stub of little relevance. I suggest that this be merged into Merge to பிராமணர் as a section.

Return to "தமிழ்ப் பிராமணர்கள்" page.