பேச்சு:தமிழ்ப் பிராமி

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை in topic கீழடி அகழாய்வு முடிவுகள்
தமிழ்ப் பிராமி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ப் பிராமி என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ப் பிராமி என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சீன எழுத்து "புத்தகம்" தமிழ்ப் பிராமி எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ப் பிராமி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வேறு கருத்துகள்

தொகு

தமிழ் பிராமியில் இருந்தே அசோகன் பிராமி தோன்றியது என்ற கருத்தும் நிலவுகிறது. காண்க: கல்வெட்டியல் நிபுணர் மகாதேவன் ஐராவதம் கட்டுரைகள்(இணையதள முகவரியை மறந்து விட்டேன்) வினோத் 13:54, 7 டிசம்பர் 2007 (UTC)

வினோத், நான் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தேன். சரியா தவறா என அறியேன். உங்களுக்கு நன்றாக தெரியுமெனில் கட்டுரையில் மாற்றி விடவும். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.--Sivakumar \பேச்சு 13:57, 7 டிசம்பர் 2007 (UTC)
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும்/இருந்த முனைவர் சிரோண்மணி அவர்கள் செய்த ஆய்வின் படி தமிழ்ப் பிராமி (தமிழி), அசோக பிராமிக்கு முன்னதாகவோ ஒரே நேரத்திலோ தோன்றியிருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். ஐராவதம் மகாதேவன் மதித்துப் போற்றும் ஆய்வாளர்களில் முனைவர் சிரோண்மணி ஒருவர். கி.மு 500-600 காலகட்டத்திலேயே தமிழி இருப்பதாகத் தடயங்கள் கிடைத்துள்ளதால், தமிழியில் இருந்து பிராமி தோன்றியிருக்கலாம் என்று சிந்திக்க முனைந்திருக்கிறார்கள் சிலர். பின்னர் இவற்றிற்கான சுட்டிகள் தருகின்றேன்..--செல்வா 14:04, 7 டிசம்பர் 2007 (UTC)

பழனியில் கிடைத்த தமிழ் பிராமி தாழி எழுத்துக்களின் காலம் கி.மு. 490 என்று கணிக்கப்பட்ட பிறகு அசோகன் பிராமியிலிருந்து தமிழ் பிராமி தோன்றியது என்று திணிக்கப்பட்ட போலி வரலாறு நொருங்கிவிட்டது.[1].

மேலும் சமண நூல்களில் சில தமிழி என்ற எழுத்தைத் தவிர திராவிட லிபி என்றொரு தமிழ் எழுத்து வகையும் உள்ளதாக கூறியுளது.

இது தவிர ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியிலுள்ள தமிழ் எழுத்துகள் அதன் காலத்தை குறைந்தது கி.மு.500 முதல் அதிகபட்சம் கிமு. 1500 வரை பழமையானதென்றும் கூறுகிறது.[2]

அசோகன் வேறு மூவேந்தர் ராச்சியமும் தனக்கு கட்டுப்படாமல் சுதந்திர ராச்சியங்களாக இருந்ததாக கூறியுளதால் அசோகன் பிராமி வேண்டுமானால் தமிழ் பிராமியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்பது வரலாற்றாளர்கள் துணிபு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:23, 3 சூன் 2012 (UTC)Reply

தமிழ் பிராமி எழுத்துக்களின் முழுத்தொகுதியும் இடப்பட்டால் பயனாயிருக்குமே?--192.248.66.3 08:31, 4 சனவரி 2013 (UTC)--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:36, 4 சனவரி 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:59, 4 சனவரி 2013 (UTC)Reply

கீழடி அகழாய்வு முடிவுகள்

தொகு

தமிழி எழுத்து பற்றிய கீழடிப் பானையோட்டு அகழாய்வு கண்டுப்புகளைச் (தமிழி, சிந்துவெளி எழுத்து கண்டுபிடிப்புகள்) சேர்க்கலாமே. இதன்படி,(தமிழக அரசின் கீழடி நான்காம் கட்ட அகழய்வு அறிக்கையின்படி) தமிழி எழுத்தின் காலம் கிமு 580 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. விமலா பெர்க்ளியின் அரிக்கமேடு முடிவுகள் சேர்க்கப்பட வேண்டும். வட புல அறிஞர் வேதம் இராசன் அவர்கள் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர். கீழடி கரிமத் துண்டுகளை தெரிவதில் பின்பற்றப்பட்டுள்ள குளறுபடிகளைத் தெளிவாக எடுத்துரைக்கிறார். அரிக்க மேட்டில் ஆய்வுக் குழியின் பொருட்களைப் போதிய நீரகற்றும் எக்கிகள் இல்லாததால் ஓரளவு ஆழத்தில் (மூன்று மீட்டர்) மட்டுமே எடுக்கப்பட்டதாக அவரது நாட்குறிப்பில் எழுதியுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் ஆதிச்சநல்லுர் பதக்கூறுகள் ஆய்வு முடிந்ததுமே உடனடியாக முறையாக கரிம ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்பதோடு இன்னமும் ஆய்வறிக்கையும் வெளியிடப்படவில்லை என்கிறார். கீழடியில் கடைசி அடுக்குப் பதக்கூறுகளை ஆய்வுக்கு அனுப்பாமல் இடைநிலை அடுக்கில் இருந்தும் அதற்கு மேலிருந்தும் மட்டுமே அனுப்பப் பட்டதைக் குறையாகக் கூறுகிறார்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:03, 21 திசம்பர் 2019 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்ப்_பிராமி&oldid=4048561" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ்ப் பிராமி" page.