பேச்சு:திருக்கோடிக்காவல்

இக்கட்டுரையில் மருகர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயரின் தாய் மாமன் ஆவார். சிறியவர் புகழ் பெற்றவராக இருந்தாலும் பெரியவரை அறிமுகம் செய்யும்போது பெரியவருக்கு சின்னவர் என்ன முறை எனச் சொல்வது மரபு. அந்த வகையிலேயே செம்மங்குடி சீனிவாச ஐயரின் தாய்மாமன் இவர் என எழுதாமல், செம்மங்குடி சீனிவாச ஐயர் இவரின் மருகர் என எழுதியுள்ளேன். மருகர் என்றால் மருமகன் என்ற பொருள்படும். கந்தசஷ்டி கவசத்தில் "வாசவன் மருகா வருக, வருக" எனவும், பெங்களூர் ரமணி அம்மாள் பாடிய ஒரு பக்திப்பாடலில் மாலோன் மருகனை எனவும் வருகிறது. - Uksharma3 (பேச்சு) 03:00, 21 பெப்ரவரி 2014 (UTC)

Return to "திருக்கோடிக்காவல்" page.