திருக்கோடிக்காவல்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்


திருக்கோடிக்காவல் தமிழ் நாடு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலூக்காவிலுள்ள ஒரு ஊராகும் [4].

திருக்கோடிக்காவல்
—  கிராமம்  —
திருக்கோடிக்காவல்
அமைவிடம்: திருக்கோடிக்காவல், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°04′16″N 79°31′16″E / 11.071°N 79.521°E / 11.071; 79.521
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

இது காவிரியின் வடபாகத்தில் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது. நில நேர்க்கோடு 11.071 நில நிரைக்கோடு 79.521 இந்த ஊரின் அமைவிடம்.

நவக்கிரக தலங்களான சூரியனார் கோயில், கஞ்சனூர் என்பவற்றோடு, மகாராஜபுரம், கதிராமங்கலம் ஆகியவை அண்மையிலுள்ள ஊர்களாகும்.

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்

தொகு

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும். [5]

சிறப்பு

தொகு

பாடல் பெற்ற தலமான திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.

திருக்கோடிக்காவல் பல சங்கீத வித்துவான்களின் பிறப்பிடமாகும். திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் வயலின் வாத்தியத்தில் பல நுட்பங்களைப் புகுத்தியவர். அவரே கருநாடக இசைக் கச்சேரிகளில் வயலின் வாத்தியத்தைப் பிரபலப்படுத்தினார் என்ற கருத்தும் உண்டு. செம்மங்குடி சீனிவாச ஐயர் இவரின் மருகர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-29. Retrieved 2014-02-20.
  5. ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோடிக்காவல்&oldid=3558107" இலிருந்து மீள்விக்கப்பட்டது