பேச்சு:திருக்கோணமலை
வார்ப்புரு:விக்க்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா
தொலைபேசி என்பதற்கு கீழ் வவுனியா என்று உள்ளதே! அது எனக்குப் புரியவில்லை... எதற்கு திருகோணமலைக்கு தொடர்புகொள்ள வவுனியா பற்றிய பேச்சு??? --ஜெ.மயூரேசன் 06:36, 20 ஜூலை 2006 (UTC)
- திருத்தங்களிற்கு நன்றி உமாபதி அண்ணா! --ஜெ.மயூரேசன் 04:26, 21 ஜூலை 2006
(UTC)
- நகரத்தந்தை என mayor ஐ அழைக்கலாமா? தமிழில் அப்பா, ஐயா, அத்தா, அச்சன், தந்தை, ஆஞா, நாயினா என்ற எத்தனையோ சொற்கள் இருக்கும் பொழுது பிதா என்ற சொல்லை ஏன் ஆளவேண்டும். திருவள்ளுவர் தந்தை மகற்காற்றும் நன்றி என்றும் ஆண்டிருக்கிறார். நகரத்தந்தை என மாற்றப் பரிந்துரைக்கிறேன். --C.R.Selvakumar 13:38, 24 ஜூலை 2006 (UTC)செல்வா
- தமிழ்நாட்டில் நகரத்தந்தை என்று தான் அழைக்கிறார்கள். (ஒருமுறை இதன் காரணமாக, துணை mayorஐ சித்தப்பா என்று அழைப்பதா என்று வேடிக்கையான விவாதம் வந்தது வேறு கதை ;)). செல்வாவின் கருத்தை ஆதரிக்கிறேன்--ரவி 22:31, 24 ஜூலை 2006 (UTC)
- ம் :) துணை நகரத்தந்தையை நகரச்சின்னையா எனில் தவறு இல்லை :) --C.R.Selvakumar 22:41, 24 ஜூலை 2006 (UTC)செல்வா
- செல்வா இரவி இலங்கையில் mayor க்கான உத்தியோகப்பூர்வ தமிழ்பெயர் நகரபிதா என்பது தான். இவ்வார்ப்புருவை பார்த்தால் இது இலங்கை நகரங்களுக்கு பொருத்தமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது (ஏ+கா இணைப்புகள்) மேலும் நகரபிதா, நகரதந்தை ஒரே அர்த்ததுடன் உள்ளது தானே குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு பதவிக்கு இரண்டுபெயர்கள் இருப்பதில் தவரொன்றும் இல்லையே. இது சொல்வளத்தை கூட்டும். ஓஓ... பிதா தமிழ் சொல் அல்லவோ???? மன்னிக்கவும் என் தமிழ் அறிவு பாவனை அறிவு மட்டுமே!!.
மேலும் எனக்கு இதை யார் எழுதினால் என தெரியாது "மாதா பிதா குரு தெய்வம்......",கிறிஸ்தவத்தில் கடவுளை "அப்பா பிதாவே" எனவும் அழைப்பது பாவனையில் உள்ளது. --டெரன்ஸ் 04:30, 25 ஜூலை 2006 (UTC)
நகரபிதாவுக்கான கூகில் தேடல் முடிவு 69. நகரதந்தைக்கான முடிவு 0
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் --ஜெ.மயூரேசன் 06:11, 25 ஜூலை 2006 (UTC)
- இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இருவருக்கும் பொதுவான சொல்லாக இருப்பதோடு நல்ல தமிழ்ச்சொல்லாகவும் இருத்தல் வேண்டும் என்ற கொள்கை பலமுறை இங்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பிதா (ஆனால், இதை போல் பல தமிழல்லாத சொற்கள் சென்ற நூற்றாண்டுத் தமிழ் கிறிஸ்தவ மொழிபெயர்ப்பாளர்களால் நிலைக்கச் செய்யப்பட்டிருக்கிறது. பொது ஊடகங்களில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்கம் சமயச் சொற்களை தொடாமல் போனது வருந்தத்தக்கது.) என்பது கிறிஸ்தவ ஆலயங்கள், பழமொழிகள் தவிர அனைத்து இடங்களிலும் வழக்கொழிந்து விட்டிருக்கிறது. பிதா, உப, உத்தியோகப்பூர்வ போன்ற சொற்கள் இலங்கையில் பரவலான பயன்பாட்டில் உள்ளன. இவற்றை விட நல்ல மாற்றுத் தமிழ்ச் சொற்களை விக்கிபீடியாவிலாவது பயன்படுத்த இன்னொருமுறை :( பரிந்துரைக்கிறேன்--ரவி 08:45, 25 ஜூலை 2006 (UTC)
இருப்பினும் இலங்கையில் பொது வழக்கில் இப்பதவி எப்படி குறிப்பிடப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நல்ல தமிழ்ப் பயன்பாடான நகரத் தந்தை பொதுப்பயன்பாட்டிலும், அலுவல் குறிப்புகளிலும் இல்லாதவிடத்து பிதா என்பதையே தொடரலாம் என உளத்தில் வலியுடன் பரிந்துரைக்கிறேன். -- Sundar \பேச்சு 08:54, 25 ஜூலை 2006 (UTC)
திருகோணமலை
தொகுகட்டுரை முழுக்க திருகோணமலை என்றும் கட்டுரைத் தலைப்பு திருக்கோணமலை என்றும் இருக்கிறது. சரியான தலைப்புக்கு நகர்த்தவும்--ரவி 19:51, 18 ஜூலை 2008 (UTC)