பேச்சு:திருக்கோவையார்
நீக்கப்பட்ட பகுதிகள்
தொகு//"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்."//
//"ஆய்ந்த கலித்துறை தான் நானூறு அகப்பொருண் மேல், வாய்ந்த நற்கோவையாம்" - வச்சநந்திமாலை.//
இவை கட்டுரையில் ஏன் இடம் பெருகின்றன எனபதைக் கூறி மேலதிக விபரங்களுடன் மீண்டுன் இணைக்கலாம். தற்போதைய நிலையில் ஒன்றும் தெளிவில்லை.--டெரன்ஸ் \பேச்சு 05:44, 20 மார்ச் 2007 (UTC)
இவை திருக்கோவையாரின் பெருமையை உணர்த்தவந்த உசாத்துணைகள் திருக்குறள், நால்வேத முடிவு, சேரசோழபாண்டியரின் தமிழும், முனிவர்ர்கள் மொழியும், திருக்கோவையாரும், திருவாசகமும், திருமந்திரமும் ஒரு வாசகமே.
நானூறு அகப்பொருள் பாடல்களைக் கொண்டது நல்ல திருக்கோவையாம்.--ஞானவெட்டியான் 06:00, 20 மார்ச் 2007 (UTC)
- நீக்கப்பட்ட பகுதிகள் ஞானவெட்டியானின் விளக்கத்துடன் மீண்டும் சேர்த்துள்ளேன். இவ்விளக்கம் போதுமானவை என்று நினைக்கிறேன்.--Kanags 10:57, 20 மார்ச் 2007 (UTC)
- ஞானவெட்டியான், மூவர் தமிழ் என்பது தேவார மூவர் தமிழ். உங்கள் கருத்தைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். --செல்வா 13:12, 20 மார்ச் 2007 (UTC)
அப்படியே ஆகட்டும்.--ஞானவெட்டியான் 15:11, 20 மார்ச் 2007 (UTC)