பேச்சு:திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்
மூலவர் உருவம்
தொகுபதிவில் திருமங்கை ஆழ்வாருக்காக பெருமாள் பெரிய வடிவில் புஜங்கசயனத்தில் பள்ளி கொண்டுள்ளார் என்றுள்ளது. ஆனால் அவ்வாறல்ல. பெருமாள் சிறிய வடிவில் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டுள்ளதை 16 மார்ச் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது நேரில் காணமுடிந்தது. கோயிலிலும் அதனை உறுதி செய்தனர். சிறிய வடிவத்திற்காகவே இப்பெருமாள் பெயர் பெற்றவர் என்று கூறினர். ஆதலால் உரிய திருத்தம் செய்யப்பட்டது. மேலும் 108 வைணவ திவ்ய தேச ஸ்தல வரலாறு (ஆ.எதிராஜன், ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், காரைக்குடி, ஐந்தாவது பதிப்பு, 2002, பக்கம்.172இல் "புஜங்க சயனத்தில் மிகச் சிறிய உருவமாயிருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட உமது குறை தீர நமது மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச்செய்த ஸ்தலம்" என்ற குறிப்பு உள்ளது. ஆதலால் தற்போது உரிய திருத்தம் செய்யப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:57, 19 மார்ச் 2019 (UTC)
16 மார்ச் 2019
தொகு16 மார்ச் 2019 அன்று நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:31, 19 மார்ச் 2019 (UTC)
கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
தொகுஇக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கோயிலின் இறைவன் கிருபா சமுத்திரப் பெருமாள் ஆவார். சயனக் கோலத்தில் காட்சி தந்தாலும் மேற்கூறிய திருநாமத்துடனேயே அழைக்கப்படுகிறார். கோயில் பற்றிய கூகுள் தேடல்களிலும், புகைப்படத் தொகுப்புகள், கோயில் பெயர்ப் பலகைகள் ஆகியவற்றிலும் கிருபா சமுத்திரப் பெருமாள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் மட்டுமே தலசயனப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
எனவே, கட்டுரைத் தலைப்பை திருச்சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் என்று ஒத்த கருத்துடையவர்களின் பங்களிப்புடன் திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!