பேச்சு:திருமண்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic வேறுபாடு
திருமண் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேறுபாடு

தொகு

வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்). தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் (நெற்றியில் பட்டை அடிப்பது parallel lines),

மேற்கண்ட வாசகங்கள் தவறென நினைக்கிறேன், இருகலைகளிலும் திருமாலின் பாதங்கள் இடம்பெறும், பாதத்தின் கீழ் தாமரை வருவது தென்கலை திருமண்ணாகும் என நினைக்கிறேன். அறிந்தவர்கள் திருத்தவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:36, 29 மே 2013 (UTC)Reply

வடபாரத சைவர்களும் நாமத்தை இடுவது போல் தெரிகிறதே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:00, 30 மே 2013 (UTC)Reply

அப்படியா, ஆச்சிரியமான செய்தி இது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:12, 30 மே 2013 (UTC)Reply

ஆம். நான் சிறு வயதில் சுற்றுலா செல்லும் போது கண்டிருக்கிறேன். உடனே உதாரணம் காட்ட வேண்டுமெனில் ஹரஹர மகாதேவா என்று பாட்டு ஓடிக்கொண்டிருக்கும் போதே ஒரு திரை நாயகன் தலைகீழ் ஆசனத்தில் தன் கோரக் கண்களை திறந்து பார்ப்பாரே. நினைவிருக்கிறதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:00, 30 மே 2013 (UTC)Reply

//பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்//

நான் கூறும் நாமத்திலும் பாதம் போடுவதில்லை. அதனால் பாதம் இல்லாமல் போடுவது நாமமே அல்ல என நினைக்கிறேன். ஆர். எஸ். எஸ். அமைப்பினர் போடுவதை கூட தமிழகத்தில் நாமம் என்று தான் சொல்கிறார்கள். அதனால் இது பெரிய குழப்பம் தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:46, 30 மே 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருமண்&oldid=3736701" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருமண்" page.