பேச்சு:திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்

இரு கோயில்கள்

தொகு

1) திருநாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோயில் என்பதானது மாடக்கோயிலாகும். காவிரியின் தென்கரையில் 96ஆவது தலம். ஞானசம்பந்த சுவாமிகளால் பாடப் பெற்ற பெருமையுடையது. மூலவர் பலாசவநேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி. மூலவர் சன்னதியின் இடது புறம் அம்பாள் சன்னதி உள்ளது. மூலவருக்கு எதிரில் நந்தியும் பலிபீடமும் காணப்படுகின்றன. உயர்ந்த தளத்தில் உள்ள இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உள்ளனர். கோயிலுக்குள் நுழைவது போன்றே இல்லாமல் வித்தியாசமான அமைப்பில் உள்ள தளத்தைக் கடந்து உயரே படிகளில் ஏறி மாடக்கோயிலை அடையலாம். இந்த மாடக்கோயிலின் கருவறை விமானம் கஜபிருஷ்ட அமைப்பில் இருந்தது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் 22.8.2005இல் நடைபெற்றதாக கோயிலிலிருந்த கும்பாபிஷேக அழைப்பிதழில் காணமுடிந்தது. இக்கோயிலில் சூரிய பகவான் சித்திரை மாதம் மூன்று, நான்கு, ஐந்தாம் தேதிகளில் தனது ஒளிக்கதிர்களால் இறைவனை பூஜை செய்யும் அரிய காட்சியைக் காணலாம் என்று கூறினர். (இச்செய்திகள் அனைத்தும் 26 பிப்ரவரி 2017 கோயிலுக்கு நேரில் சென்றபோது பார்த்தபோது திரட்டப்பட்ட விவரங்கள் ஆகும்).

2) திருநாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோயிலுக்குத் தென்மேற்கே நாலூர் என்ற வைப்புத்தலம் உள்ளது. (நாலூர் கோயிலுக்கு நேரில் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை)

பல இடங்களிலும், தளங்களிலும், செய்திகளிலும் இரு கோயில்களையும் இணைத்து மாறி மாறி எழுதியிருப்பதைக் காணமுடிந்தது. தெளிவிற்காக முதல் பத்தியில் உள்ள விவரங்கள் தரப்பட்டுள்ளன. திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில் என்ற தலைப்பிலான இப்பதிவிலும் இரு கோயில்களைப் பற்றிய செய்திகளும் இணைந்து காணப்படுகின்றன. இரண்டாவதாகச் சுட்டப்பட்டுள்ள (நாலூர் என்னும் வைப்புத்தலம்)கோயிலுக்கு நேரில் சென்று விவரங்கள் தொகுக்கப்பட்ட பின்னர் இப்பதிவினை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:30, 10 மார்ச் 2017 (UTC)

Return to "திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்" page.