பேச்சு:தில்லை வாழ் அந்தணர்

தில்லை வாழ் அந்தணர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தில்லை வாழ்ந்தணர் என்பது பிழை. தில்லை வாழ் அந்தணர் அல்லது தில்லை வாழந்தணர் என இருக்கவேண்டும். அத்துடன், கட்டுரை விக்கிபீடியாவுக்குரிய நடைமுறைகளுக்குப் பொருத்தமற்ற தொனியில் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. திருத்தம் தேவை. Mayooranathan 17:34, 15 ஜூன் 2007 (UTC)

மயூரநாதன், தலைப்பில் தவறுதலாக எழுத்துப் பிழைவிட்டுவிட்டேன். தாங்கள் சுட்டிக்காட்டியதும் சரிசெய்துவிட்டேன். ஆம் இக்கட்டுரையின் உரைநடை நன்றாக இல்லை. ஒன்றில் இதைத் திருத்தி அமைக்கலாம் ஆனால் சில வேளைகளில் புதிதாகக் கட்டுரை ஆரம்பிப்பது இலகுவாக இருக்கும். என்னிடம் தில்லைவாழ் அந்தணர்கள் பற்றி அவ்வளவாகத் தகவல் இல்லை. எனினும் விக்கிபீடியாவின் உரை நடைபாதிக்காவண்ணம் சிறிதளவு தகவலேனும் கிடைத்தால் சேர்க்க அல்லது வியலுமா?. நீங்கள் புதிதாகக் கட்டுரை ஆரம்பிக்க விரும்பினால் தாராளாக இருக்கின்ற கட்டுரையை அழித்துவிட்டு ஆரம்பிக்கலாம். கட்டுரையை பயனர்:உமாபதி/தில்லை வாழ் அந்தணர் இல் பிரதி பண்ணியுள்ளேன். --Umapathy 09:14, 17 ஜூன் 2007 (UTC)
Return to "தில்லை வாழ் அந்தணர்" page.