பேச்சு:தீ உண்டாக்கல்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தீ உண்டாக்க எனச் சொல்வதற்குப் பதில் தீ மூட்ட என்று சொல்லலாமா?--ரவி 08:52, 15 மார்ச் 2008 (UTC)
- ரவி, கட்டுரையிலும் ஓரிடத்தில் "தீ மூட்டுதல்" என்று குறிப்பிட்டுள்ளேன். தீமூட்டுதல் என்பது சிறப்பான சொல், எனவே அதனையே தலைப்பாகவும் கொள்ளலாம். பிறரும் மாற்றிவிடலாம் என்று சொன்னால், மாற்றிவிடுகின்றேன். "உண்டாக்கல்" என்பது சற்று பொதுவானதாகத் தோன்றியது எனவே அப்படிப் பெயரிட்டேன். பெட்ரோலியக் குழல், எரிவளிக்குழல் முதலிய பிற தீ தோற்றுவித்து எரியச்செய்யும் முறைகளையும் உள்ளடக்குமோ என நினைத்தேன். மூட்டுதல் என்பதும் பொருள் செறிந்த சொல்தான். "சேர்வித்தல்", கூட்டுவித்தல், உண்டாகச்செய்தல். மூளுதல், கொளுத்துதல், பொத்துதல் (தீ பொத்திக்கொண்டது - தீ பற்றிக்கொண்டது எனப்து இதன் வழிப்பட்ட தனிச்சொல்)
- அருமையான தீ உண்டாக்கும் அசைப்படம்.--த* உழவன் 10:43, 9 திசம்பர் 2010 (UTC)