முதன்மை பட்டியைத் திறக்கவும்

தீ உண்டாக்கல்

வனுவாட்டு மனிதன் மரத்தோடு மரம் உரசி தீ உண்டாக்கல். தமிழில் தீக்கடைதல், ஞெலிதல் என்று பெயர்.
பாஸ்பரஸ் முதலான பொருள்களால் ஆன நுனி கொண்ட தீக்குச்சிகள். இவற்றை சொரசொரப்பான பகுதியில் விரைந்து தேய்த்தால் தீ உண்டாகும். தீ உண்டாக்க 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தீக்குச்சிகள் பயன்பாட்டில் உள்ளன.

தீயை உண்டாக்க இன்று பல முறைகள் உள்ளன (எ.கா. தீக்குச்சி, தீப்பற்றும் பெட்ரோலியக்குழல், எரிவளிக்குழல்). ஆனால் தொல்பழங்காலம் முதல் அண்மைக்காலம் வரை தீ உண்டாக்குவது அத்தனை எளிதானதல்ல. தொல் பழங்காலத்தில் இயற்கையில் காய்ந்த மரத்தோடு மரம் உரசும் பொழுது தோன்றிய தீ, அல்லது அத் தீ அடங்கிய பின் கனன்றுகொண்டிருக்கும் மரம், கரி முதலியவற்றில் இருந்து பற்றப்படும் தீ. இப்படித்தான் தீயைப் மாந்தன் பெற்றான் என்கிறார்கள் அறிஞர்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரும்புக்கனிமம் உள்ள கற்களை உரசியோ, தீக்கடைக் கோல் எனப்படும் மரக்குச்சியால் உரசியோ தேய்த்தோ தீ உண்டாக்கி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இன்றும் உலக மக்களின் பண்பாடுகளோடு பங்குகொள்ளாமல் தனித்து வாழும் சில தொல்குடி மக்கள் சிலர் தீக்கடைக் கோல் பயன்படுத்துகின்றனர். தமிழில் இவற்றை ஞெலிகோல் என்றும் கூறிவந்தனர் [1] இவ்வகையான தீ மூட்டும் முறைகள் பழைய கற்கால மக்களுக்குத் தெரிந்து இருந்தது. மாந்த இனம் தற்கால மாந்த இனமாக உயிரின வளர்ச்சி பெறும் முன்னரே, ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழுநிலை தொல்முன்மாந்தன் காலத்திலேயே தீ உண்டாக்கக் கற்றுக்கொண்டான் என்பார்கள் அறிஞர்கள். இதற்கு அடிப்படை தொல்லியலில் கண்டுபிடித்த பழைய அடுப்புகள்தாம்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்தொகு

  1. *இல்லறச் சொறி இய ஞெலிகோ - புறம் 315
    *தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின் - புறம் 150
    *கானவர் பொத்திய ஞெலி தீ - புறம் 247
    *புல்லென் மாலை சிறுதீ ஞெலியும் கல்லா விடையன் - புறம் 33 *
    --(www.thamizam.net)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_உண்டாக்கல்&oldid=2741741" இருந்து மீள்விக்கப்பட்டது