பேச்சு:துறைமுகம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sundar
ஆங்கில விக்கிபீடியாவில் portகளுக்கும் harbourகளுக்கும் வேறுபாடு காட்டி கட்டுரை எழுதப்படுள்ளது. இந்த வேறுபாட்டை உணர்த்தும் வகையில் portக்கு ஒத்த தமிழ் சொல் பிடி பட மாட்டேன் என்கிறது. உங்களுக்கு தெரிந்தால், இங்கு பதியுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 18:41, 21 செப்டெம்பர் 2005 (UTC)
- துறை என்பது Portக்கு பொருந்தும் என்று நினைக்கிறேன். படகுத்துறை என்ற சொற்கள் நடைமுறையில் உள்ளன. எனினும் இன்னும் பொருத்தமான வார்த்தையைத் தேடலாம். --Sivakumar 07:20, 22 செப்டெம்பர் 2005 (UTC)
படகுத்துறை என் நினைவில் இருந்த சொல் தான்..ஆனால், அது சிறு படகுகள் மட்டும் வந்து போகும் இடமான jetty போன்று ஒரு தோற்றம் தருகிறது. TVU தளத்தில் harbour, port இரண்டுக்குமே துறைமுகம் என்று தான் பொருள் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக தமிழில் துறை என்ற சொல் தண்ணீரில் செல்லும் வாகனங்கள் வந்து போகும் இடங்களுக்கு பொருந்தி வரும்..இதை வைத்து, நல்ல சொல் ஒன்றை உருவாக்க வேண்டும்--ரவி (பேச்சு) 08:28, 22 செப்டெம்பர் 2005 (UTC)
- port என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைமுகங்கள் (harbour) உள்ள இடத்தைக் குறிக்கும். இதன் படி, துறைமுகம் என்ற இக்கட்டுரை ஆங்கில விக்கியின் en:Harbour கட்டுரையைச் சுட்டி நிற்க வேண்டும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:55, 14 சூலை 2013 (UTC)
- செய்யலாம். port என்பதைப் புகார் எனவும் port city-ஐ பட்டணம் எனவும் சொல்லலாமா? -- சுந்தர் \பேச்சு 08:31, 14 சூலை 2013 (UTC) துறை என்றாலே port என்பதைத்தான் குறிக்கிறது. ஆறு கடலில் சேருமிடத்தைப் புகார் என்றனர் போலும். அவற்றை சேரநாட்டில் கடவு, புழைக்கடவு என்பர். -- சுந்தர் \பேச்சு 08:38, 14 சூலை 2013 (UTC)