பேச்சு:தூனிசியா
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags
Tunisia துனீசியா என்றே உச்சரிக்கப்படுகிறது. இங்கு கேட்டுப் பாருங்கள்: [1]. நன்றி.--Kanags \உரையாடுக 04:08, 22 சனவரி 2011 (UTC)
தூனிசியா என்றுதான் அரபியில் உள்ளது. பழைய தமிழ் இஸ்லாமிய நூல்கள் அனைத்தும் தூனிசியா என்று சரியாக அரபியில் உள்ளவாறே குறிப்பிடுவதைக் காணலாம்.--பாஹிம் 04:25, 22 சனவரி 2011 (UTC)
- நன்றி பாகிம், கட்டுரையின் உள்ளே அரபு உச்சரிப்பு குறித்து எழுதியுள்ளேன் சரியா என்று பாருங்கள். தவறென்றால் திருத்துங்கள். தலைப்பு துனீசியா என்றே இருப்பது நல்லது. அவ்வாறே தமிழில் எழுதப்படுகிறது.--Kanags \உரையாடுக 06:48, 22 சனவரி 2011 (UTC)
- பயனர்:Fahimrazick, அமெரிக்காக்காரன் தனது வழக்கப்படி உச்சரிக்கிறான், ஆங்கிலேயன் தனது வழக்கப்படி உச்சரிக்கிறான், நாமும் நமது வழக்கப்படியே எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 13:47, 31 திசம்பர் 2015 (UTC)
எமது வழக்கத்துக்கு மாறானதா தூனிசியா என்பது அல்லது உச்சரிக்க முடியாததா அல்லது இலக்கணக் குற்றமுள்ளதா? ஏராளமான தமிழ் இஸ்லாமிய நூல்கள் தூனிசியா என்றுதான் குறிப்பிடுகின்றன. அவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டாமா? ஏனைய தமிழ் நூல்களில் இடம்பெற முன்னரே இஸ்லாமிய நூல்களில் இடம்பெற்ற பெயர்தான் தூனிசியா என்பது.--பாஹிம் (பேச்சு) 00:36, 1 சனவரி 2016 (UTC)
- தூனீசியா உச்சரிக்க முடிகிறது. தூனிசியா முடியவில்லை.--Kanags \உரையாடுக 00:46, 1 சனவரி 2016 (UTC)