தொடக்க நூல் - ஆதியாகமம் இரண்டையும் இணைத்தல் தொகு

  • சோடாபாட்டில்,

நீங்கள் அனுப்பிய செய்தியை இப்பொழுதுதான் என் "பேச்சு" பக்கத்தில் பார்த்தேன். என் சிந்தனைகளை இங்கே பகிர்கின்றேன்.


  • கிறித்தவ சபைகள் பயன்படுத்தி வந்துள்ள விவிலியத் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல. மிக அண்மையில் கத்தோலிக்க சபை, பல சீர்திருத்த சபைகள் இணைந்து வெளியிட்ட திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு என்பது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, விக்கிப்பீடியா, விக்கிமூலம் போன்ற திட்டங்களில் இப்பொது மொழிபெயர்ப்பைக் கையாளுவது பொருத்தம் ஆகும்.

Genesis என்னும் நூல் பழைய தமிழ் வழக்கில் ஆதியாகமம் என்று பெயர் பெற்றது. புதிய பெயர்ப்பில் அது தொடக்க நூல் என்று அழைக்கப்படுகிறது.

எனவே, தொடக்க நூல் என்பதை முதன்மை இடுகையாகக் கொண்டு, ஆதியாகமம் என்பதை மீள்வழிப்படுத்தலாம் என்று கருதுகிறேன்.

அதுபோலவே, பிற நூல் பெயர்களுக்கும் செய்யலாம்.

  • தொடக்க நூல் (ஆதியாகமம்)
  • விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)
  • லேவியர் (லேவியராகமம்)
  • எண்ணிக்கை (எண்ணாகமம்)
  • இணைச் சட்டம் (உபாகமம்)
  • நீதித் தலைவர்கள் (நீதிபதிகள்/நியாயாதிபதிகள் ஆகமம்)
  • ரூத்து (ரூத்)
  • 1 அரசர்கள் (1 இராஜாக்கள்)
  • 2 அரசர்கள் (2 இராஜாக்கள்)
  • 1 குறிப்பேடு (1 நாளாகமம்)
  • 2 குறிப்பேடு (2 நாளாகமம்)
  • திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)
  • நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)
  • சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்)
  • இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம்/பாட்டு)
  • தோபித்து (தொபியாசு ஆகமம்)
  • சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)
  • சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)
  • யோவான் (அருளப்பர்) நற்செய்தி
  • திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி)
  • 1 பேதுரு (1 இராயப்பர்)
  • 2 பேதுரு (2 இராயப்பர்)
  • 1 யோவான் (1 அருளப்பர்)
  • 2 யோவான் (2 அருளப்பர்)
  • 2 யோவான் (2 அருளப்பர்)

--- மேற்கூறிய நூல்களின் பழைய பெயரைக் குறிப்பிட்டு மீள்வழிப்படுத்தலாம்.

  • எந்தெந்த நூல்களுக்கு ஏற்கெனவே குறுங்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளனவோ அவற்றில் அடங்கியிருக்கின்ற தகவல்களில் பொருத்தமானவற்றைத் தேர்ந்து, இணைத்துப் புதிய பெயரின்கீழ் கொணரலாம்.
  • அதற்கான முயற்சிகளைச் செய்ய அணியமாயிருக்கிறேன்.

--பவுல்-Paul 05:57, 30 நவம்பர் 2010 (UTC)Reply

அவ்வாறே செய்யுங்கள் பவுல். இணைத்த பின்பு சொல்லுங்கள், அதன் வரலாற்றுப்பக்கங்களையும் இணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில் 06:06, 30 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொடக்க_நூல்&oldid=640277" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தொடக்க நூல்" page.