பேச்சு:தொழிற்புரட்சி

தொழிற்புரட்சி எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
தொழிற்புரட்சி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இதுவொரு முக்கியமான கட்டுரை. பொறுமையாகப் பலரும் கூடி விரிவாக்குவது நல்லது. இக்கட்டுரையைத் தேர்ந்தெடுத்த இரவிக்கு என் பாராட்டுகள். இக்கிழமைக்குள் பெரிதாக விரிவாக்க முடியாவிட்டாலும், தொடந்து பொறுமையாக விரிவாக்கி செம்மைப்படுத்த வேண்டிய முக்கியக் கட்டுரைகளில் இது ஒன்று. --செல்வா 16:40, 28 பெப்ரவரி 2012 (UTC)

கூட்டு முயற்சி எவ்வளவு சிறப்பாக பயனளிக்கின்றது என்பதற்கு இக்கட்டுரை ஒரு நல்ல சான்று! --செல்வா (பேச்சு) 21:37, 1 மார்ச் 2012 (UTC)
ஆம், செல்வா. கடந்த வாரக் கூட்டு முயற்சித் தலைப்புகள் அனைத்தும் நல்ல பங்களிப்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மாரடைப்பு கட்டுரையை தொழில்முறை மருத்துவர்களே மேம்படுத்தியது சிறப்பு. அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் கூட்டு முயற்சிக்கான அறிவிப்பை இட்டுள்ளதும் பயன் தந்துள்ளது. வழமையான பங்களிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய அறிவிப்புகளையும் இவ்வாறு இடலாம் எனக் கருதுகிறேன். இந்த வேளையில், மேலும் பல முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளைக் கூட்டு முயற்சிக்காகப் பரிந்துரைக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 07:51, 2 மார்ச் 2012 (UTC)

தோற்றுவாய் தொகு

//18ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மக்கள் தங்கள் வீடுகளிலும் பட்டறைகளிலும் தங்கள் தேவைக்கேற்ற முறையில் பொருள்களை உற்பத்தி செய்தனர். நாகரிகம் வளர்ந்து பொருளாதாரச் செயற்பாடுகள் விரிவடையவே, தம் தேவையை மட்டும் நிறைவு செய்தல் என்ற நிலை மறைந்தது. பின்னர் பல திறம்பட்ட கைவினைஞர்கள் தோன்றி சந்தைக்காகப் பொருள்களை உற்பத்தி செய்யும் முறை தோன்றியது. இது சங்க முறை எனப்பட்டது. //

என்று கட்டுரை கூறுகிறது. ஆனால், பண்ட மாற்று முறை இருந்த வரலாற்றுக் காலம் முதற்கொண்டு கொல்லர்கள், உழவர்கள் முதலிய பலரும் தத்தம் தேவைக்கு மேலேயே உற்பத்தி செய்து வந்துள்ளனர். கைவினைஞர்களின் தோற்றமும் சந்தையின் தோற்றமும் தொழிற்புரட்சிக்கு முற்பட்டது.

//பிரித்தானிய சரக்குகளுக்கு வெளிநாடுகளில் தேவை ஏற்பட்டதும் சங்க முறை முறிந்தது. தேவைப் பெருக்கத்தை ஈடுகட்ட உற்பத்தியின் வேகத்தைப் பெருக்கக் கூடிய வழிவகைகள் நாடப்பட்டன//

பிரித்தானியாவின் சரக்குகளுக்குத் தேவை கூடியது பொருளாதாரக் காரணங்களாலா, அரசியற் காரணங்களாலா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். கூடிய உற்பத்திக்கு புதிய சந்தைகளைக் கண்டடைய வேண்டிய தேவை இருந்ததா என்பதும் ஒரு கேள்வி--இரவி (பேச்சு) 17:24, 4 மார்ச் 2012 (UTC)

செய்வினை, செயப்பாட்டுவினை பயன்பாடு தொகு

இரவி, உங்கள் உரைதிருத்தம் கண்டேன். சில இடங்களில் செயப்பாட்டுவினை (குறிப்பாக, "சட்டம் இயற்றப்பட்டது") தெளிவான பொருள் தரும். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் இயற்றினார்கள் என்பது அவ்வளவு தெளிவாக இல்லை. அல்லது இன்னார் அச்சட்டத்தை இயற்றினார்/இயற்றினார்கள் என்றாவது குறிப்பிட வேண்டும். --பவுல்-Paul (பேச்சு) 19:02, 4 மார்ச் 2012 (UTC)

சட்டம் இயற்றப்பட்டது என்னும் போதும் யாரால் இயற்றப்பட்டது என்ற செய்தி இல்லையே? யார் செய்தார்கள் என்பது முக்கியத்துவம் இல்லாதபோதும் யார் செய்திருக்கக்கூடும் என்பது அறிந்த செய்தியாக இருக்கும்போதும் (இந்த இடத்தில் சட்டம் இயற்றும் பொறுப்பு உள்ள பாராளுமன்றம்), பெயரைச் சொல்லாமல் இவ்வாறு எழுதலாம் என்றே கருதுகிறேன். --இரவி (பேச்சு) 05:16, 2 ஏப்ரல் 2012 (UTC)
  • இரவி, "சட்டம் இயற்றப்பட்டது" என்னும்போது "சட்டம்" எழுவாயாக நின்று அழுத்தம் பெறுகின்றது. அச்சட்டத்தின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. எனவேதான் மேற்கண்டவாறு கூறினேன். தொழிற்புரட்சிக் காலத்தில் எல்லாச் சட்டங்களும் பாராளுமன்றத்தால் மட்டுமே இயற்றப்பட்டன என்றும் கூற முடியாது. எனவே, தெளிவாக எழுவாய் உள்ள இடங்களில் அதைக் கொடுக்கலாம். தவறு இல்லை.--பவுல்-Paul (பேச்சு) 11:16, 2 ஏப்ரல் 2012 (UTC)

//"சட்டம் இயற்றப்பட்டது" என்னும்போது "சட்டம்" எழுவாயாக நின்று அழுத்தம் பெறுகின்றது. அச்சட்டத்தின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.//

இதனை ஏற்றுக் கொள்கிறேன். இனி செய்யும் உரை திருத்தங்களில் இதனைக் கவனித்துச் செய்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி--இரவி (பேச்சு) 10:55, 3 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொழிற்புரட்சி&oldid=1265292" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தொழிற்புரட்சி" page.