பேச்சு:தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Paramatamil in topic Untitled
தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

AntanO அவர்களுக்கு,

Untitled

தொகு

இக்கட்டுரையில் மேற்கோளாக <"ref name="ரெங்கையா முருகன்">தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, ச. சரவணன் (மொ-ர்), ரெங்கையா முருகன் (ப-ர்) (2012). ஓர் இந்திய கிராமத்தின் கதை. சென்னை: சந்தியா பதிப்பகம். pp. 6–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789381343067.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)</ref"> என்று தந்திருந்தேன். இதுகுறித்து தெளிவுபடுத்தவேண்டியுள்ளது. இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் 1911-இல் ஆங்கிலத்தில் வெளியிட்ட "ஓர் இந்திய கிராமத்தின் கதை" நூலில் உள்ளவை அன்று. மாறாக 2012இல் வெளியிடப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் பதிப்பாசிரியரான ரெங்கையா முருகன் இணைத்துள்ள ஆய்வுக்கட்டுரையில் உள்ளவை (பக். 6 முதல் 23 வரை). அதாவது, இவை தோட்டக்காடு ராமகிருஷ்ணாவோ அல்லது அன்றைய பதிப்பாளர்களோ சொன்னவையன்று. மாறாக ஆசிரியர் மற்றும் நூலின் முக்கியத்துவம் கருதி அண்மைக்காலத்தில் இந்நூலின் மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்க முடிவுசெய்தபோது அதன் பதிப்பாசிரியராகத் திகழ்ந்தவர் இணைத்துள்ள ஆய்வுக்கட்டுரையில் உள்ள தகவல்கள். அக்கட்டுரையின் இறுதியிலேயே அக்கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது (7 தமிழ் நூல்கள், 1 ஆங்கில நூல், 10க்கும் மேற்பட்ட 1889-1912 காலகட்டத்திய கல்லூரி மலர்கள்). இது அக்கட்டுரையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாயுள்ளது. இவை கருதியே இம்மேற்கோளை இணைத்திருந்தேன்.(இது தெளிவாக புலப்படும்படி மேற்கோள் வடிவமைப்பை மாற்றவேண்டியுள்ளது).

இல்லாவிட்டால் இந்தப் பக்கத்தை மட்டும் மேற்கோளாகத் தரவேண்டியிருக்கும். இதிலுள்ள முருகனும் அதே ரெங்கையா முருகனாக இருக்கவும் வாய்ப்புண்டு. அல்லது அதே 7 தமிழ் நூல்கள், 1 ஆங்கில நூல், 10க்கும் மேற்பட்ட 1889-1912 காலகட்டத்திய கல்லூரி மலர்களின் குறிப்பிட்ட பக்கங்களைத் தேடவேண்டியதுதான். Paramatamil (பேச்சு) 16:35, 4 மே 2016 (UTC)Reply

Return to "தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை" page.