பேச்சு:நகைமுகம் (குறியீடு)
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Tharique
வணக்கம் சோடாபாட்டில், புன்னகை தவழும் முகம் என்ற தலைப்பில் Smiley பற்றிய கட்டுரையானது, இணையம் மற்றும் நகல்பேசி நிலையில் காணப்படுகின்ற உணர்ச்சித்திரங்களின் (emoticon) பாவனையைப் பற்றி மட்டும் சொன்னதால், அதனை முழுவதுமாக நான் புதிய தகவல்களோடு மாற்றியமைத்திருக்கிறேன். ஆனாலும், புன்னகை தவழும் முகம் என்ற பெயரை விட, ஸ்மைலி என்ற பெயரே பொதுவில் அதிகளவில் பாவனையில் இருப்பதால், அதன் தலைப்பை புன்னகை தவழும் முகம் (ஸ்மைலி) என மாற்றியமைக்க பரிந்துரைக்கிறேன். நன்றி. --Tharique 12:40, 27 சூன் 2011 (UTC)
- புன்னகை தவழும் முகம் தலைப்பு பொருத்தமாயில்லை. விக்சனரியின் படி smiley நகைமுகம் எனலாம்.--Kanags \உரையாடுக 13:11, 27 சூன் 2011 (UTC)
- ஆமாம் சிறீதரன், எனக்கும் ஆரம்பத்தில் குறித்த கட்டுரையை வாசிக்கும் போது, இது எதைப் பற்றிச் சொல்கின்றதென்ற குழப்பமிருந்தது. பின்னர், இதற்கான ஆங்கில விக்கியின் இணைப்பை தொடர்ந்து சென்று, இது smiley பற்றியதென உறுதி செய்து கொண்ட பின்னரே, குறித்த கட்டுரையை முழுவதுமாக தொகுக்கத் தொடங்கினேன். நீங்கள் குறிப்பிட்டது போன்றே, நானும், குறித்த கட்டுரையின் தலைப்பை, நகைமுகம் (ஸ்மைலி) என மாற்றலாம் என பரிந்துரைக்கிறேன். நன்றி. --Tharique 13:47, 27 சூன் 2011 (UTC)