பேச்சு:நாடி
மயூரநாதன், நாழிகை என்பது தான் சரியான spelling என நினைக்கிறேன். எனினும் உறுதியாக தெரியவில்லை. இதை சரி பார்க்க இயலுமா? பஞ்சாங்கம் குறித்தும் ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்--ரவி (பேச்சு) 08:58, 6 செப்டெம்பர் 2005 (UTC)
ரவி, நாளிகையின் எழுத்துக்கூட்டல் பற்றிக் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றிகள். இரண்டு புத்தகங்களில் பார்த்தேன் ஒன்றில் நாளிகை என்றும், மற்றதில் நாழிகை என்றும் உள்ளன. வேறு இடங்களிலும் பார்த்துவிட்டு தேவையானால் திருத்தம் செய்கிறேன். நாளிகை என்பது நாள் என்ற சொல்லுடன் தொடர்பு உள்ளதாக இருக்கலாம் என நினைத்தேன். நாழிகை சரியாக இருக்கவும் கூடும். பஞ்சாங்கம் பற்றியும் எழுதவுள்ளேன். Mayooranathan 17:53, 6 செப்டெம்பர் 2005 (UTC)
மயூரநாதன், விளக்கத்திற்கு நன்றி. நாள்-->நாளிகை என்பது logicalஆகத் தோன்றினாலும் பல புத்தகங்களில் நாழிகை என்று தான் படித்த ஞாபகம். நீங்கள் இதை உறுதி செய்து கொண்டு தேவையான மாற்றங்களை செய்யலாம்.--ரவி (பேச்சு) 08:31, 7 செப்டெம்பர் 2005 (UTC)
தமிழில் நாடி, நாழி, நாழிகை என்ற மூன்று சொற்களும் 24 மணித்துளிகளைத்தான் குறிக்கும். நாளிகை என்பது பிழையான சொல். ழகரத்தை முறையாக பலுக்காத்ததினால் வந்த பிழையாக இருக்கலாம். தமிழ்நாட்டில் நாழி, நாழிகைதான் இன்று பெரும்பாலும் வழங்குகிறது. அன்றாட பேச்சு வழக்கிலும், இதைச் செய்ய இவ்வளவு நாழியாகுமா? இத்தன நாழியா என்ன பண்ணினே? என்று கூறுவார்கள். பெரும்பாலும் இப்பேச்சு வழக்கு தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைமார், முதலியார்கள், பிராமணர்கள் குடும்பங்களிலே இருக்கக்கண்டு இருக்கிறேன். நூல்களிலேயும் ஆளப்பட்டுள்ளது. நாடி பிற பல பொருள்களும் உள்ளது, அதே போல நாழி என்பதும் பரவலாக ஒரு படி முகத்தல் அளவையைக் குறிக்கும். இது நீரால் ஆன கடிகைகளில் இருந்து நேரத்தைக் குறிப்பது என்பது உறுதி செய்ய வேண்டிய என் கணிப்பு--C.R.Selvakumar 12:37, 6 ஜூன் 2006 (UTC)செல்வா
இந்துமதத்தில் மட்டும் அல்ல, சமண, புத்த (சாக்கிய) மதத்தை பின்பற்றுவோரும் பயன்படுத்திய கால அலவு முறை. எனவே திருத்தியுள்ளேன். இலங்கை அயல் நாடு அல்ல, இந்தியாவிற்கு அண்டை நாடு. --C.R.Selvakumar 13:04, 6 ஜூன் 2006 (UTC)செல்வா