பேச்சு:நானோ தொழில்நுட்பம்
நுல்லிய,நுண்,நூண என்ற அடிப்படையில் நூணநுட்பியல் என்று நனோ தொழில்நுட்பதத்தை இராம்.கி, செல்வராஜ், மற்றும் சிலர் பயன்படுத்துகின்றார்கள் அல்லது பரிந்துரைக்கின்றார்கள். அது நல்ல சொல் மாதிரியே தெரிகின்றது. அச்சொல் நோக்கிய உங்கள் பார்வை என்ன?--Natkeeran 12:38, 24 ஜூலை 2006 (UTC)
- நனோ என்பது அளவீடு தானே? நாங்கள் மீட்டர் என்பதற்கு தமிழ் சொல் தேடவிழையவில்லையே???--ஜெ.மயூரேசன் 06:53, 25 ஜூலை 2006 (UTC)
- நானும் மயூரேசனோடு ஒப்புகின்றேன். நானோ என்பது இங்கு அலகின் அடிப்படையில் எழுந்த சொல், ஆகவே நானோ என்றே இருப்பதே நல்லது. நானோ என்பதும் வேற்றுமொழிச்சொலாயினும், குறிப்பாய் நுண், நுணிய, நூணா என்பதை நன்கு உணர்த்தும். அலகின் அடிப்படையில் அமைந்த சொற்களைக் கூடிய மட்டிலும் மாற்றாமல் ஆளுவதே நல்லது என்பது என் கருத்து.--C.R.Selvakumar 13:14, 25 ஜூலை 2006 (UTC)செல்வா
- அளவீடுகளில் தமிழ்ச்சொற்களை ஏன் நாம் தேடுவதில்லை . ஏன் நாம் தேடக்கூடாது . அளவீடுகளை பொருத்தமட்டில் நாம் இன்னும் கவனமாக இருபது நல்லது. முதலில் computer என்ற ஆங்கில சொல்லுக்கு கணினி என்று சொல்லும் பொழுது அதை பயன்படுத்த எத்தனை தமிழர்கள் வெட்கப்பட்டனர் . பின்னர் அது வழக்கத்தில் வந்து அதன் இனிமையும் சுவையையும் புரிந்து கொண்டனர் . கணினி என்று சொன்னால் எவர்களுக்கு புரிய போகிறது என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். இன்று அதுவே சிறந்த பொருத்தமான எளிதில் அறிந்து கொள்ள முடிகிற சொல் ஆகிவிட்டது . ஆகையால் நாம் அளவீடுகளில் தமிழ்ச் சொற்களை தேடுவதையே நான் பரிந்துரைக்கிறேன். மேலும் இது தமிழின் இயலாமையையே காட்டுகிறது. எனவே meter முதல் நானோ வரை அனைத்து சொல்லுக்கும் தமிழில் சொல்லை கண்டறிய வேண்டும் என்பதே என் கருத்து .
−முன்நிற்கும் கருத்து Inbamkumar86 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நானோ, பிக்கோ, ஃவெம்ப்ட்டோ (femto), அட்டோ, செப்டோ, யோக்டோ ஆகியவற்றை அப்படியே பயன்படுத்துவது என்று நாம் முடிவு எடுத்து செய்கிறோம். அதே போல தனிமங்களின் பெயர்களையும் அப்படியே எடுத்தாள்கிறோம், பண்பலகுகளாகிய ஆம்ப்பியர், வோல்ட்டு, வீபர், கௌசு முதலியனவற்றையும் அப்படியே எடுத்து ஆள்கிறோம். இதில் தமிழின் இயலாமை ஏதும் இல்லை. சென்ட்டிகிரேடு என்பதை நூற்றன் பாகை என்று கூறலாம், ஆனால் செல்சியசு என்பதையும் , பாரன்ஃகைட்டு, கெல்வின் என்பதனையும் அப்படியேதான் பயன்படுத்த வேண்டும். ஆயிரத்தில் ஒரு பகுதியை கீழாயிரம் என்றும், கீழ்நூறாயிரம் (10-5, கீழிருபடியாயிரம் (கீழ்மில்லியன் 10-6), கீழ்முப்படியாயிரம் (10-9, நானோ), கீழ்நாற்படியாயிரம் (10-12), கீழைம்படியாயிரம் (10-15) என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றுக்கெல்லாம் சுருக்கமாக தமிழ் முன்னொட்டும் உருவாக்கலாம், முடியாது என்பதல்ல, ஆனால் அவை தேவையற்றது. உலகப்பொதுமை கருதி சிலவற்றை அப்படியே எடுத்தாளலாம். மைக்ரோ என்பதை அறுகீழ் (கீழ் அறுபடிய பதின்மம் என்பது) என்றோ, ஈராங்கீழ் (ஆயிரத்தின் இருபடிய கீழ்) என்றோ கூறலாம். அதுபோல மூவாங்கீழ் (nano) என்றும், நாலாங்கீழ் (பிக்கோ), ஐந்தாங்கீழ் (வெ'ம்ட்டோ), ஆறாங்கீழ் (அட்டோ), ஏழாங்கீழ் (zepto), எட்டாங்கீழ் (yocto)....என்றெல்லாம் கூறலாம். இவற்றில் இடையே வரும் ஆ என்பது ஆயிரம் என்பதைக் குறிக்கும் எனக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக எட்டாங்கீழ் என்பது 1/10008 = 10-24 என்பதாகும். எனவே ஆக்கமுடியாததால் அல்ல. பொதுமை கருதி நாம் தேர்ந்து கொள்வது. நம்மால் இயலாவிடினும், ஆம், நம் மொழியில் இது இயலவில்லை (நம் மொழியை நாம் அறிந்த அளவிலே) என்று நேர்மையுடன் எண்ணி எடுத்தாள்வதில் தவறில்லை. தமிழின் சொல்வளத்தால் ஏறத்தாழ எதனையும் வளமுடன் சொல்லுதல் கூடும். --செல்வா 20:50, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
குறைகடத்தி- அரைக்கடத்தி
தொகுஆங்கிலத்தில் semiconductor என்றாலும், அதனைத் தமிழில் சரியாக குறைகடத்தி என்றுதான் பெயர்க்கின்றோம். அருள்கூர்ந்து அரைக்கடத்தி எனப் பெயர்க்காதீர்கள். இது பொருட்பிழையான வடிப்பு. அரைபங்கு க்டத்துவதன்று இப்பொருள். அரைகுறையாகக் கடத்தும் பொருள் என்றுவேண்டுமானால் சொல்லலாம். இடாய்ச்சு மொழியிலும் கூட Halbleiter என்று தவறுதலான பொருள்தரும் சொல்லைத்தான் ஆள்கின்றார்கள். Halb என்றால் பாதி, அரை. Leiter என்றால் கடத்தி (conductor). --செல்வா (பேச்சு) 12:51, 10 சூன் 2017 (UTC)