பேச்சு:நாயுருவி

சுந்தர், எதற்காக நடைக் கையேட்டைப் பார்க்கப் பரிந்துரைத்துள்ளீர்கள் எனப் புரியவில்லை. மேலும், உடற்பலம் ,பற்பொடி என்பது மருத்துவ குணமா? --கோபி 16:40, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

தாவரங்களின் அறிவியல் பெயர்களை சாய்வெழுத்துக்களில் தர வேண்டும். சுந்தர் இதற்காகத் தான் நடைக்கையேட்டை பார்க்க சொன்னார் என்று நினைக்கிறேன். மேற்படி காரணங்கள் இருந்தால் அவரே தெரிவிக்கலாம். மூலிகைகள் குறித்த கட்டுரைகளில் தகுந்த ஆதாரங்களின்றி மருத்துவக் குறிப்புகள் தருவது கட்டுரையின் தரத்தை குறைப்பதாகவே கருதுகிறேன். குறைந்த பட்சம், ஆதாரம் தேவைப்படுகிறது என்பது போன்ற அறிவிப்பையாவது இட வேண்டும். இல்லாவிட்டால், மூன்றாந்தர வார இதழில் வரும் மருத்துவக் குறிப்பு போன்ற தோற்றத்தை தான் இக்கட்டுரைகள் கொண்டிருக்கும்--ரவி 16:51, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, உடற் பலம், பற்பொடி என்பவை குறிப்பது எதனை? அதற்கான ஆதாரம் என்ன? நான் க. ரத்னம் என்பவர் எழுதிய தமிழ்நாட்டு மூலிகைகள் என்ற நூலின் உதவியுடனேயே கட்டுரைகளை விரிவாக்கம் செய்தேன். --கோபி 16:56, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

இது சுந்தர் செய்யும் தொகுப்பு போன்றே இல்லை ;) கொஞ்சம் விந்தையாகத் தான் இருக்கிறது. அவர் விளக்கும் வரை பொறுப்போம். கோபி, மூலிகைகள் குறித்து பல நூட்கள் வெளியாகின்றன. விரல்விட்டு எண்ணத்தக்க ஆசிரியர்களின் நூட்களையே நம்பலாம். க. ரத்னம் பற்றி நான் அறியேன். அவரின் நம்பகத்தன்மையில் உங்களுக்கு உறுதி இருந்தால், தாராளமாக கட்டுரையில் சேருங்கள். இலங்கையில் முழுக்க தமிழில் பாடம் கற்பிக்கப்படும் சித்த மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் பாடத்திட்டங்களில் உள்ள நூட்கள் உங்கள் கைக்கு கிடைக்குமானால், மிகச்சிறப்பாக இருக்கும். அதன் மூலம் மருத்துவத் துறை சார்ந்த பல கட்டுரைகளை மேம்படுத்தலாம். --ரவி 17:05, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

அந்நூலின் நம்பகத் தன்மை தொடர்பில் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டது போன்ற நூல்கள் ஏதாவது கிடைத்தால் நூலகம் திட்டத்தில் இணைக்க முயல்கிறேன். மேலும் மூலிகைகள் தொடர்பான எனது அறிவு குறைவானதாகையால் நான் இப்பகுப்பிலுள்ள கட்டுரைகளிலிருந்து விலகியிருப்பதே நல்லதெனப் படுகிறது. ஆனால் உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடிய தகவல்களை மட்டும் சேர்க்கிறேன். ஆக இன்னொரு நூலை நான் பெற வேண்டும் .பார்ப்போம். கோபி 17:12, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

நாயுருவி என்பது ஒரு மருத்துவத்துக்கும் பயன்படக்கூடிய மூலிகை என்றாலும், அதை ஒரு செடியெனக் கொண்டு கட்டுரையை வளர்த்துச் செல்வதே பொருத்தமானது. நாயுருவிச் செடி, ஒரு அலங்காரத் தாவரமாகக்கூடப் பயன்படுகின்றது. மருத்துவப் பயன்பாடு இதன் ஒரு அம்சம் மட்டுமே. தமிழ் விக்கிபீடியாவில், மூலிகை தொடர்பானவையாக எழுதப்பட்ட பல குறுங் கட்டுரைகளிலும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ளன. எனவே இத்தகைய கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய முயலும்போது மருத்துவ நோக்கில் மட்டும் பார்க்காது பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். Mayooranathan 17:44, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about நாயுருவி

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாயுருவி&oldid=59960" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாயுருவி" page.