பேச்சு:நாவலன் தீவு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic பேச்சுப்பக்கத்தை நீக்க வேண்டாம்

ஆராய்ச்சிக் கட்டுரையா? ஏற்கனவே குமரிக் கண்டம் என்ற கட்டுரையில் இதிலுள்ள செய்திகள் காணப்படுகின்றன. தேவநேயப் பாவாணர் என்ன தொல்லியலாளரா? அவரது செய்திகள் வெறும் ஊகம். அவற்றை எப்படி வரலாற்றுப் பகுதியிற் சேர்க்கலாம்?--பாஹிம் (பேச்சு) 08:17, 26 அக்டோபர் 2012 (UTC)Reply

குமரி கண்டம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன, ஆனால் நாவலன் தீவு பற்றிய செய்தி ஒன்றும் இல்லை; குமரி கண்டம் என்பது நாவலன் தீவே என யாழ் பாணத்து நாவலியூர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை எழுதிய "நமது நாடு" என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..

Published on : Sep-1945; Published By : The South India Saiva Siddhanta Works Publishing Society; Tirunelveli & Madras

தேவநேயப் பாவாணர் என்ன தொல்லியலாளரா?

தொகு

\\அவரது செய்திகள் வெறும் ஊகம்.\\

அவ்வாறு கூறுவது தான் ஊகம்.

மேலும் தொல்லியல் கொண்டு மட்டும் தான் குமரிக்கண்டத்தை பற்றி ஆய வேண்டும் என்றில்லை. பாவாணர் வாதங்கள் எல்லாம் மொழியியல் ரீதியில் வரும். உதாரணமாக மொழி அடர்த்தி என்பதை பார்க்கலாம். பாவாணர் அறிவியல் ரீதியில் உள்ள தகவல்களை ஒன்று திரட்டி அதற்கு தன் வல்துறையான மொழியியல் ரீதியில் சான்றுகளை காட்டியிருப்பார்.

\\தேவநேயப் பாவாணர் என்ன தொல்லியலாளரா?\\

இப்படி நீங்கள் கேட்பது தொல்லியற் துறையினர் தான் குமரிக்கண்டத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறுவதைப் போலுள்ளது. மொழிப்பரவல், சொற்திரிபுகள் மூலமும் இது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதில் எந்தத்தடையும் தவறும் இல்லை. இதை மறுப்பதற்குதான் ஆய்வுகள் செய்ய வேண்டும். ஆய்வுகள் செய்யாமல் மறுத்தால் அல்லது அது தொடர்பான மேற்கோள்களை தரவில்லை என்றால் அதைத்தான் ஊகம் என்று கொள்வர்.

விட்டால் நீங்கள் இறையனார் அகப்பொருள் எழுதியவர் தொல்லியலாளரா என்று கேட்பீர்கள் போலவே. :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:19, 16 சனவரி 2013 (UTC)Reply

\\அவற்றை எப்படி வரலாற்றுப் பகுதியிற் சேர்க்கலாம்\\

வரலாற்றுப்பகுதி என்று நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:19, 16 சனவரி 2013 (UTC)Reply

பேச்சுப்பக்கத்தை நீக்க வேண்டாம்

தொகு

நாவலந்தீவு பண்டைய இந்தியா பாண்டி நாடு இரண்டையுமே குறிப்பதாக வேறு வேறு கருதுகோள்கள் உள்ளன. நாளை இதே பெயரில் ஒருவர் கட்டுரை தொடங்கும் போது இப்பேச்சுப்பக்கம் உபயோகப்படலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:52, 21 சனவரி 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாவலன்_தீவு&oldid=2583862" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாவலன் தீவு" page.