பேச்சு:நியமவிலகல்
கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டது. --இரா. செந்தில் 03:30, 13 ஜூலை 2010 (UTC)
- நியமச்சாய்வு என்பது சரியான சொற்பொருள் தரவில்லை என்று நினைக்கின்றேன். ஒரு எண் தரவுத் தொகுதியில், அதன் சராசரியில் இருந்து பொதுவாக ஒரு தரவு எவ்வளவு விலகி இருக்கின்றது என்று அறியத் தரும் ஒரு கணிப்புக் கருத்து அல்லது அளவுக்குறி. சராசரியில் இருந்து விலகும் ஒரு தரவு, கூடவோ குறையவோ இருக்கலாம் என்பதால், வெறும் பரும அளவை மட்டும் கணிப்பதற்காக இந்த விலகல்கள் தன்னால் பெறுக்கப்படுகின்றன (இருமடி). ஆகவே இதனை (சராசரியிலிருந்து) சீரிய விலக்கம் எனலாம். இதில் சீரிய என்பது சீர்+இய = சீரான, சீர்மையான, சீர்மை செய்த என்பது வேறுபாடுகளை இருமடியாக்கி அவற்றைக் கூட்டி தரவுகளின் எண்ணிகையால் வகுத்து, அவற்றின் வருக்கமூலம் (இருமடிவேர்) எடுத்து சீர்செய்வதால், சீரிய என்று பொருள்படும். எனவே சீரிய விலக்கம் அல்லது சீரிய விலகுபாடு எனலாம். இதில் சாய்வு எல்லாம் ஏதும் இல்லை என்பதால் கூறுகின்றேன். விலகுபாடு என்பதை சரிவு, சாய்வு என்று கூற இடம் உள்ளது, ஆனால் போதிய துல்லியம் இல்லாததாஅக உணர்கிறேன்.--செல்வா 14:59, 28 ஜூலை 2010 (UTC)
- சீரிய விலக்கம், சீரிய விலகுபாடு என்பன நன்றாக உள்ளன. இராம.கி. சில இடங்களில் வேறுபாட்டுக் கெழு என்று பயன்படுத்தியுள்ளார். -- சுந்தர் \பேச்சு 15:20, 28 ஜூலை 2010 (UTC)
- நன்றி, சுந்தர். வேறுபாட்டுக்கெழு என்பதை variance என்னும் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். இவை இரண்டும் தொடர்புடையவையே. சீரிய என்பதற்கு மாற்றுச்சொல்லாக சீரக என்றும் சொல்லலாம். சீரக விலகுபாடு. தமிழில் அகல், அகல்வு, அகற்சி போன்றவற்றையும் கருதலாம். (ஒரு நினைப்புக்காக குறிக்கின்றேன்) எ.கா சராசரி அகற்சி. --செல்வா 04:57, 29 ஜூலை 2010 (UTC)
- சீரிய விலக்கம், சீரிய விலகுபாடு என்பன நன்றாக உள்ளன. இராம.கி. சில இடங்களில் வேறுபாட்டுக் கெழு என்று பயன்படுத்தியுள்ளார். -- சுந்தர் \பேச்சு 15:20, 28 ஜூலை 2010 (UTC)
Probability என்பதற்கு நிகழ்தகவு என்பது ஏறத்தாழ சீர்மை பெற்ற வழக்காகவே உள்ளது. இதனை நிகழ்தகவு என்று வாய்விட்டுச் சொல்வதில் இடர் இருப்பதாக இராம.கி ஐயா ஓரிடத்திலே சொல்லி இருக்கிறார். மகிழ்தல், திகழ்தல், வாழ்தல் போன்ற சொற்களில் -ழ்த- என்னும் எழுத்துக்கூட்டல்கள் வந்தாலும், நிகழ்தகவு என்று வருவதில் ஏதோ இடர் சற்று இருப்பதுபோல் தெரிகின்றது. இதனால் இச்சொல்லை மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் மாற்றுச் சொல் வேண்டியிருந்தால் நிகழ்வாய்ப்பு என்னும் சொல்லை ஆளலாம். இது வரலாற்றுக் குறிப்பாகவும்,ஒருகால் வேறு ஒரு பயன்பாடு வேண்டும் என்று விரும்பினால் தேர்ந்து கொள்வதற்காகவும் மட்டுமே இடுகின்றேன். அல்லது உடன்வழங்கும் பிறிதொரு சொல்லாகவும் பயன்படுத்தலாம். சொற்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது நல்லதல்ல, ஆனாலும் ஆங்கிலம் முதல் பல மொழிகளில் சொற்கள் தொடக்ககாலங்களில் மாற்றப்பட்டிருக்கின்றன. Standard Deviation என்பதற்கு சராசரி அகற்சி என்று மேலே குறிப்பிட்ட சொல்லை ஆளலாமா? −முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- யாரும் மறுப்பு சொல்லவில்லை எனில் சராசரி அகற்சி எனத் தலைப்பை மாற்ற இருக்கின்றேன். --செல்வா 14:39, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
- கட்டுரையின் தலைப்பையும் உள்ளேயும், சராசரி அகற்சி என மாற்றியுள்ளேன். கட்டுரையின் முதல் பத்தியை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன் (இப்பொழுது சற்று புரியும் என நினைக்கின்றேன்).--−முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தற்போது இடப்பட்டிருக்கும் தலைப்பு Mean deviation என்பதுடன் குழப்பிக்கொள்ளக்கூடியது எனவே தலைப்பை நியம விலகல் என்று மாற்றலாம் என நினைக்கிறேன், இப்படித்தான் பள்ளியிலும் படித்தோம்.--சங்கீர்த்தன் (பேச்சு) 07:25, 26 ஆகத்து 2012 (UTC)
- standard deviation என்பதற்கு நியம விலகல் பொருத்தமாகவே உள்ளது. சராசரி என்ற சொல் இங்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன். பார்க்க: விக்சனரி.--Kanags \உரையாடுக 08:42, 26 ஆகத்து 2012 (UTC)
நீக்கப்பெற்ற வரிகள், பகுதிகள்
தொகு- முதல் பத்தியின் கடைசி வரி, இயற்கணிதரீதியாக எளிதில் கையாளக்கூடியதாக இருந்தாலும் எதிர்நோக்கு சாய்வு அல்லது சராசரி முற்றுச் சாய்வைக் காட்டிலும் நடைமுறையில் குறைந்த அளவிற்கே வலுவானதாக இருக்கிறது. என்று இருந்தது- இக் கூற்றுக்குத்தகுந்த சான்றுகோள் இல்லை. எதிர்நோக்குச் சாய்வு என்று கூறப்பட்டுள்ளது Absolute deviation என்றோ expected deviation என்றோ கூறப்படும் கருத்து. இதில் சராசரியில் இருந்து ஒவ்வொரு தரவிலும் நேரும் விலக்கத்தின் திசையைக் கணக்கில் கொள்ளாமல், பரும அளவை மட்டுமே கருத்தில் கொள்ள தற்பெருக்கத்துக்கு மாறாக (இரு மடிக்கு மாறாக), பரும அளவை மட்டும் கண்டு அவற்றைக் கூட்டி சராசரி கண்டுபிடிக்கின்றார்கள். இதனால் விளையும் பயன் பல துறைகளில் என்ன என்பது தெளிவாகவில்லை. எனவே நீக்கம்.--செல்வா 03:34, 22 ஆகஸ்ட் 2010 (UTC)