பேச்சு:நிலக்கடலை
தமிழ்நாட்டில் வேர்க்கடலை என்றும் நிலக்கடலை என்றும் வழங்கும் சொல்லைக் கச்சான் என்று கூறுவார்களா இலங்கையில்? மணிலாக்கொட்டை என்றும் மல்லாக்கொட்டை என்றும் வழங்குவதூம் உண்டு (சிறுபான்மை). பிலிப்பைன்சு நாட்டின் தலைநகரான மணிலாவில் இருந்து வந்ததாகப் பொருள்படும் மணிலாக் கொட்டை. சுருங்கி மல்லாக் கொட்டை ஆயிற்று. வேர்க்கடலை, நிலக்கடலை என்பனவே தமிழ்நாட்டில் பெருவழக்கு. கச்சான் என்பது பச்சை வேர்க்கடலை என்னும் பொருள் தருவதில் இருந்து வந்ததா? தமிழ் லெக்ஃசிக்கனிலும் இல்லையே. Groudnut என்னும் சொல் பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபின்னரே 1602 இல் வழக்குக்கு வந்தது. இது தமிழ் நிலக்கடலையில் இருந்து வந்திருக்கலாம், ஆங்கிலத்தில் calque (உறுப்புபெயர்ப்பு) என்னும் முறைப்படி. --செல்வா 03:41, 8 ஜூலை 2009 (UTC)
- கச்சான் என்று பேச்சு வழக்கிலேயே உள்ளது. பொதுவாக நிலக்கடலை என்றே எழுதுவோம். தலைப்பை நிலக்கடலை அல்லது வேர்க்கடலை என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.
இலங்கையின் வடக்கின் சில பகுதிகளிலும், கிழக்கு மாகாணப் பகுதியிலுமே இதனைக் கச்சான் எனக் கூறும் வழக்கம் பொதுவாக இருக்கிறது. தென் மாகாணத்திலும், மேல் மாகாணத்திலும் நிலக்கடலை என்றே அழைக்கப்படுகிறது. அத்துடன் இதற்கு இந்தோனேசிய மொழிகளிலும் நிலக்கடலை போன்ற பல்வேறு கடலை வகைகளையும் தானிய வகைகலையும் கச்சான் (kacang) என்றே பொதுவாகக் கூறப்படுகிறது. இலங்கையில் கச்சான் என்று அழைக்கப்படும் வழக்கம் இன்றைய இந்தோனேசியத் தீவுகளிலிருந்து பண்டைக் காலத்தில் இடம் பெயர்ந்தோரான இலங்கை மலாயரின் வழியாக வந்திருக்கலாம். ஏனெனில் இலங்கை மலாயரில் ஏராளமானோர் திருகோணமலையிலேயே வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 12:10, 17 திசம்பர் 2012 (UTC)