இதற்கு ஏன் நீக்கல் வார்ப்புரு இடப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள இயலாமல் உள்ளது. --Natkeeran (பேச்சு) 20:39, 24 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், கட்டுரையில் தகவல் பெட்டி இல்லை. நகரத்தில் புவியிடக்கூறுகள் போன்ற அடிப்படை தகவல் இல்லை. கட்டுரை ஒரு கிலோ பைட்டுக்குக் கீழே உள்ளது. அண்மையில், இது போன்று நீக்கல் வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகள் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளன என்ற அடிப்படையில் இக்கட்டுரையும் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கிலேயே நீக்கல் வார்ப்புரு இட்டிருக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:46, 24 ஏப்ரல் 2014 (UTC)
முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் நீக்கல் வார்ப்புரு நீங்கள் இன்றும் சேர்க்கலாம். பின்னர் மறந்துவிட, இவை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஆகையால்தான் நீக்கல் வார்ப்புருவை மிகவும் அவதானமாகப் பயன்படுத்தவும். --Natkeeran (பேச்சு) 20:52, 24 ஏப்ரல் 2014 (UTC)

கிணற்றைக் காணோம் :)

தொகு

கிணற்றைக் காணோம். வார்ப்புருவைத் தோண்டினால் கண்டுபிடிக்கலாம்.--இரவி (பேச்சு) 14:41, 11 மே 2014 (UTC)Reply

இரவி, உங்கள் கருத்து விக்கி நடைமுறைக்கே முரணானது. தனிக் கட்டுரைகளாக இருப்பதில் உங்களுக்கு என்ன பெரிய சிக்கல்? இதனால் என்ன பாதகம்? ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கூகிகில் தேடி, அக் கட்டுரைத் தலைப்பில் விக்கிக் கட்டுரை இருந்தால் அது கூகிளில் கூடிய இலகுவாகக் கிடைக்கும். இதையே ஒரு பிரச்சினையாக அணுகுகிறீர்கள். ஒரு குறுங்கட்டுரை ஏன் எரிச்சலுக்கு உரிய விடயம் ஆக அமைகிறது? குறுங்கட்டுரைகள் விரிவுபட வேண்டும் என்று நீங்கள் கருதினால், ஏன் ஒரு சிறிய நேரத்தையாவாது அவற்றை மேம்படுத்தும் பணியில் செலவிடக் கூடாது?
கிணறு தோண்டுவதற்கு இடமிருந்தால் தானே தோண்ட முடியும்? நீங்கள் நிலத்தினையே அழிக்கிறீர்கள். பிறகு எப்படிக் கிணறு தோண்ட முடியும்? வழமை போல இணக்க முடிவு எடுத்துச் செய்யவும். கோபி (பேச்சு) 15:04, 11 மே 2014 (UTC)Reply
கோபி, கிணறு காணாமல் போனதாக வடிவலு சொன்ன நகைச்சுவையைச் சரியாகப் புரியவைக்காமல் பயன்படுத்தி விட்டேனோ :( கட்டுரையில் ஏற்கனவே 8 கிலோ பைட்டு அளவுக்குத் தகவல் உள்ளது. ஆனால், கட்டுரையில் பயன்படுத்தியுள்ள வார்ப்புருவில் உள்ள கோளாறால் முழுப்பக்கமும் மறைந்துள்ளது. இதனைத் தீர்க்க முயன்று பார்த்து, சிக்கல் புரிபடாததால், இந்த வார்ப்புருச் சிக்கலை சரி செய்ய உதவி கோரி ஒரு கவன ஈர்ப்பாகவே முந்தைய தகவலை இட்டேன். இனி நேரடியாக செய்திகளை உள்ளிடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:19, 11 மே 2014 (UTC)Reply

இரவி, நானும் நகைச்சுவையாகவே கருத்திட்டேன். கருத்து இக்கிணற்றை மட்டும் பற்றியதல்ல. :) நன்றி. கோபி (பேச்சு) 15:32, 11 மே 2014 (UTC)Reply

கோபி, சப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே.. எதுனாலும் உள்குத்து இல்லாம நேரடியாவே குத்துங்க :) --இரவி (பேச்சு) 15:38, 11 மே 2014 (UTC)Reply

விக்கி ஒரு அரட்டை அரங்கம் அல்ல நிர்வாகிகளே--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:39, 11 மே 2014 (UTC)Reply

யாழ்ஸ்ரீ, இடித்துரைத்தமைக்கு நன்றி. சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த சில வேளை நகைச்சுவை உதவும். ஆனால், இது முற்று முழுதான அரட்டையாக நீளாமல் பார்த்துக் கொள்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 18:31, 11 மே 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நூக்&oldid=1658704" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நூக்" page.