பேச்சு:நெய்வேலி காட்டாமணக்கு
நல்ல கட்டுரையை எழுதியுள்ளீர்கள் சிங்கமுகன்! வேலிகாத்தான் என்றழைக்கப்படுவதும் என்பது இது தானே! உயிரியலில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக எழுதி வருகிறீர்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்! துறை சார் கட்டுரைகளை எழுதும் போது சொல் குறித்த உரையாடல்கள் நீள வாய்ப்புள்ளது. அந்த உரையாடல்கள் ஆரோக்கியமாக அமையட்டும்! - பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 14:18, 13 மார்ச் 2011 (UTC)
கார்த்திகேயன் அவர்களுக்கு, இதன் பெயர் காட்டாமணி அல்லது நெய்வேலி காட்டாமணக்கு என அழைப்பார்கள். வேலிகாத்தான் என்பது நாம் பரவலாக அறிந்த முட்செடியாகும். இங்கு விக்கிப்பீடியாவில் சீமை கருவேலமரம் என்றத் தலைப்பில் உள்ளது. நன்றிகளுடன் - --சிங்கமுகன் 17:40, 13 மார்ச் 2011 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி சிங்கமுகன். எனது தாயார் என் சிறுவயதில் எனக்குத் தாவரப்பெயர்களைச் சொல்லித் தந்த போது இதைக் காட்டாமணக்கு என்று தான் கூறினார்.(ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய் தானே முதல் ஆசான்! என் தாய் மஞ்சனத்தி மரத்தில் வளரும் தொற்றுத் தாவரம், மாடு மேய்க்கும் எறும்பு, தும்பைச் செடித் தேன் என்று பல உயிரியல் கருத்துக்களைச் சொல்லித் தந்தார். கிராமத்து மனிதர்களிடம் உள்ள உயிரியல் அறிவு நம்மை வியக்கவும் வெட்கப்படவும் வைக்கிறது)
- சி.மகேந்திரன் தனது ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் நூலில் இதை வேலிகாத்தான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இதை அகற்ற விவசாயிகள் போராட்டம் நடத்தியதாயும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நான் ஏதும் அறிந்திலேன் - பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 14:18, 13 மார்ச் 2011 (UTC)
கார்த்திகேயன் அவர்களுக்கு, காட்டாமணக்கு என்பது Jatropha curcas ஆகும். இதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். வேலிக்காத்தான் மற்றும் காட்டாமணி இரண்டுமே நச்சு தான். இரண்டையுமே நாட்டை விட்டு அகற்றினால் தான் விவசாயம் செழிக்கும். இந்தப் போராட்டம் போதாது. இதைவிட பன்மடங்குத் தேவை நாடுசெழிக்க. நன்றிகளுடன். --சிங்கமுகன் 19:16, 15 மார்ச் 2011 (UTC)
Start a discussion about நெய்வேலி காட்டாமணக்கு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve நெய்வேலி காட்டாமணக்கு.