பேச்சு:நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு
ஒருங்கமை சமன்பாடுகள் கட்டுரையின் பக்க வரலாற்றை இங்கு இணைத்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:22, 31 திசம்பர் 2010 (UTC)
ஒருங்கமை சமன்பாடுகள் கட்டுரையின் பேச்சுப்பக்க செய்தி
தொகுசெல்வா, நாம் இருவரும் ஒரே நேரத்தில் இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டோம் போலிருக்கிறது. :-) நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு என்று கிட்டத்தட்ட இதனையே தான் எழுதத் தொடங்கி இருந்தேன். இப்போது தான் உங்களுடையதைப் பார்த்தேன். உங்களுடைய கட்டுரை இன்னும் விரிவாக இருக்கிறது என நினைக்கிறேன். அதனால், அதனை நீக்கி விடுங்கள். அல்லது இதற்கு வழிமாற்றி விடுங்கள். பத்தாம் நிலைத் தமிழ்க் கணித ஏட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருங்கமைச் சமன்பாடுகள், நேரியல் சமன்பாடுகள், ஒருபடிச் சமன்பாடுகள் என்று பலவிதமாக இருந்தது. --இரா. செல்வராசு 21:28, 30 திசம்பர் 2010 (UTC)
- ஆமாம் செல்வராசு!! இப்போதைக்கு ஆங்கில விக்கியில் உள்ளதை அப்படியே மொழி பெயர்ப்போம், பின்னர்
தேவைக்கு ஏற்ப மாற்றலாம் என எண்ணித் தெடங்கினேன். பார்த்தால் நாம் இருவருமே ஒரே நேரத்தில் இதனனச் செய்திருக்கின்றோம் :) நீங்கள் தொடங்கிய கட்டுரை சற்று முன்னர் என்பதால் நான் எழுதியதை உங்கள் கட்டுரையில் தக்கவாறு இணைத்து விடுங்கள். சுந்தரோ, சிறீதரன் கனகோ உதவக்கூடும் (கட்டுரைகள் இணைப்பதை நான் இன்னும் பழகிக்கொள்ள வில்லை). --செல்வா 21:42, 30 திசம்பர் 2010 (UTC)