பேச்சு:நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Jayarathina
சேப்பல் - சிற்றாலயம்
பெசிலிகா - பேராலயம் என்று ஒரு விக்கி கட்டுரையில் படித்தேன். கதீட்ரல் - ? உண்மையான பொருளை அறிந்தோர் விளக்கவும். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:33, 25 ஏப்ரல் 2011 (UTC)
- கதீட்ரல் அல்லது கதீடிரல் என்பது ஒரு மறைமாவட்ட ஆயரின் (bishop) அதிகார மைய ஆலயத்தைக்குறிக்கும். ஒரு மறை மாவட்டத்தின் தாய்க்கோவிலும் இது ஆகும். 'Cathedral' என்னும் சொல், அரியணை என்னும் பொருள்படும் cathedra என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வந்ததாகும். எல்லா கதீடிரல்களிலும் ஆயரின் அரியணை இருக்கும். ஆயர் கதிடிரலிலிருந்து ஆட்சிசெய்வதாக கொள்ளப்படும். மேலும் ஆயரின் அதிகாரப்பூர்வ இல்லம் கதிடிரலுக்கு அருகில் இருக்கும் (அல்லது இருப்பது மரபு).
ஆங்கிலப் பெயர் | தமிழ்ப் பெயர் | விளக்கம் |
---|---|---|
Chapel | சிற்றாலயம் | தனிப்பட்ட சமூகத்திற்கு உறியது. (சபையோ, பள்ளியோ அல்லது அளவில் கிறியதாய் இருக்கும் குழுமமோ) |
Church | கோவில்/ஆலயம் | பங்கு அல்லது பொது மக்களின் வழிபாட்டிடம். |
Cathedral | கதீட்ரல்/பேராலயம் | மறைமாவட்ட ஆயரின் (bishop) அதிகார மைய ஆலயம் மற்றும் அம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும் |
Basilica | பசிலிகா/பேராலயம் | ஆலயங்களுல் சிறப்பு மிக்க ஆலயம் என திருத்தந்தையால் அறிவிக்கப்படும் ஆலயமாகும். இத்தகுதி நிலை இப்போது கதீட்ரல்களுக்கு வழங்கப்படுவது இல்லை. ஆலய முக்கியத்துவ வரிசைப்பட்டியலில் ஆயரின் அதிகார பீடமான தலைமை ஆலயமே (Cathedral) பேராலயங்களைக் காட்டிலும் முதலிடம் பெறும். |