பேச்சு:பகுரைன்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
இந் நாட்டின் பெயரை பஃரேய்ன் என்று எழுதுனாலும் இதே ஒலிப்புதானே வரும் - தமிழ் எழுத்துக்களினாலேயே இருப்பதால் இப்படியும் தரலாமே. 2500-3000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்த பஃறுளி ஆறு நினைவிருக்குமே. --செல்வா 17:17, 24 மார்ச் 2007 (UTC)
இப்போதைக்கு பஃரேய்ன் என்று வார்ப்புருவில் இட்டுள்ளேன். இது வேண்டாம் பஹ்ரேய்ன் தான் பொருந்தும் எனில், நானே மாற்றிவிடுகின்றேன். பஃரேய்ன் என்பது சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு, ஆனால் ஏற்கனவே பழக்கப்பட்டது என்னும் கரணியங்களினால் பஹ்ரேய்ன் என்று இருக்கவேண்டும் எனில், இங்கு குறிப்பு விடுக.--செல்வா 17:49, 24 மார்ச் 2007 (UTC)
- இந்நாட்டின் பெயர் பஹ்ரைன் என்பதே தவிர பஹ்ரேய்ன் அல்ல. எனவே, தமிழ் முறைக்கு ஏற்ப இதனை பகுரைன் எனத் திருத்தியுள்ளேன். பக்தாது நகரத்தின் பெயரைப் பண்டைக் காலத்திலிருந்தே பகுதாது என்று தமிழ்ப்படுத்தும் வழக்கம் உள்ளதைப் போன்று இதுவும் இங்கு பொருந்துகிறது.--பாஹிம் (பேச்சு) 04:19, 6 நவம்பர் 2012 (UTC)