பேச்சு:பசுமைக்கரங்கள் திட்டம்

ஒரு வேளை இத்திட்டம் வெற்றி அடைந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறினால், அப்பொழுது இக்கட்டுரையை தருவது பொருத்தமாக இருக்கும். தற்போது இது ஒரு விழிப்புணர்வு அறிவிப்பாகவே தோன்றுகிறது. (செய்திக்குறிப்பாகக் கூட அல்ல). இக்கட்டுரை விக்கிபீடியாவில் இடம்பெற வேண்டுமா என்பது குறித்த பிறர் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்--Ravidreams 13:45, 22 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி, தமிழ்நாட்டில் இருந்து வெளிக்கிட்டு பல நாட்கள் போல் இருக்கின்றது. செய்திக் குறிப்பை பார்த்தீர்கள் என்றால். அவர்கள் ஏற்கனவே ஒரு கின்னஸ் சாதனையுடன் தான் ஆரம்பித்து இருக்கின்றார்கள். இத் திட்டத்துக்கு அரச ஒத்துளைப்பும் உள்ளது என்று நினைக்கின்றேன்.  !!! --Natkeeran 15:20, 22 நவம்பர் 2006 (UTC)Reply

தமிழ்நாட்டில் இருந்து வந்து 8 மாதங்கள் தான் ஆகின்றன. அன்றாடம் தமிழக செய்திகளைப் படிக்கும் வழக்கமும் உண்டு. தமிழ்நாட்டில் கின்னஸ் சாதனை stuntகளுக்கு பஞ்சம் கிடையாது. நட்ட கன்று எல்லாம் மரமாகும் என்பதற்கு உத்திரவாதமும் கிடையாது. பல திட்டங்கள் இப்படி அறிவிப்புத் திருவிழாவோடு முடிந்து போவதும அதை செய்தி ஊடகங்கள் வெளிச்சமிட்டு பக்கத்தை நிரப்பிக் கொள்வதும் தெரிந்தது தான். திட்டத்தில் அரசு சார் பங்களிப்பு ஒரு பொருட்டல்ல. இது போல் நாட்டில் பல திட்டங்கள் இருக்கின்றன. ஒரு வேளை வருங்காலத்தில் இத்திட்டத்தின் பலன் பெருமளவில் உணரப்பட்டால் அப்போது இது ஒரு விக்கிபீடியா கட்டுரையாகும். எனவே தான் அறிவித்த உடனே இதை விக்கிபீடியாவில் தனிக்கட்டுரையாக இட வேண்டுமா என்ற நோக்கில் delete வார்ப்புரு இட்டேன். மறுமொழிக்கு காத்திராமல் அவ்வார்ப்புருவை பல நாள் userஆன நீங்களே தன்னிச்சையாக நீக்கியது தகுமா? பிறிதொரு பக்கத்தில் நான் தெரிவித்தது போல் எந்தெந்த தகவல்கள், செய்திகளை விக்கிபீடியாவில் குவிக்க வேண்டும் என்பதில் ஒரு புரிந்துணர்வு வேணடும். இது போன்ற பேச்சுப் பக்கங்களை அதற்கான களமாக கொள்ளலாம். --Ravidreams 15:40, 22 நவம்பர் 2006 (UTC)Reply


ரவி, இன்று purging moode இல் இருப்பதாக தெரிகின்றது. அக்கறைக்கு நன்றி. தவறு எனதுதான். மன்னித்துவிடுங்கள். இலாப நோக்க மற்ற, (சமய சார்பு இருக்கின்றதோ தெரியவில்லை), சமூக அக்கறை கொண்ட ஒரு நிறுவனத்தின் திட்டம். ஆங்கில விக்கி இந்த விடயத்தில் முன்மாதிரியாக கொள்ள முடியாது. ஏன் என்றால், அங்கு இக்கட்டுரைய இட்டால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதே வேளை த.வி தனித்துவம் உண்டு. இங்கு வணிக பரப்புரை நோக்கோடு தகவல்கள் இடுவதை நாம் விரும்பமாட்டோம். எங்களுக்கு முன் இருக்கும் கேள்வி, இது ஒரு பரப்புரையா, தகவலா என்பதுவே. மேலும், எல்லாவற்றுக்கும் ஒரு வித cynical உள்நோக்கம் இருக்கும் என்று நாம் கொள்ளத் தேவையில்லைத் தானே. --Natkeeran 15:55, 22 நவம்பர் 2006 (UTC)Reply

நற்கீரன், உங்களை இப்ப மன்னிக்கிறேன் ;) அடுத்த முறை நீங்க மன்னிக்கலாம் ;) இத்திட்டம் வணிக நோக்கற்றதாகவே இருந்தாலும், திட்டத்துக்கு பின் உள்ளவர்கள் சமயப் பின்னணி அற்றவர்களாக இருந்தாலும் கூட, இத்தகவல் இங்கு இடம்பெற வேண்டுமா என்பது சிந்திக்கத்தக்கது. ஆங்கில விக்கியை ஒரு referenceக்காக நான் குறிப்பிடுவது உண்டு என்றாலும் எல்லா சமயங்களிலும் அதை பின்பற்றத் தேவையில்லை நம் அனைவரின் புரிந்துணர்வு. பயனுள்ளவை, தகவல் தருபவை என்ற விரிவான வரையறையை விட சற்றுக் குறுக்கி விக்கிபீடியா கலைக்களஞ்சியம் என்ற நோக்கில் என்னென்ன கட்டுரைகள் இங்கு இடம்பெற வேண்டும் என்று உரையாட வேண்டும். சமையல் குறிப்பு கூட பயனுள்ளது தான். அரசு அறிவிப்புகள் கூட தகவல் தருபவை தான். ஆனால், இவற்றை கலைக்களஞ்சியத்தில் தான் தர வேண்டுமா என்பது என் கேள்வி. விக்கிபீடியா போன்ற சுதந்திரமான, பரவலாக அறியப்படும் தளத்தில் இவற்றை எழுதுவதன் நோக்கம் புரிந்து கொள்ளத்தக்கது தான் என்றாலும் விக்கிபீடியா மட்டுமே தமிழ் இணையத்தில் யாதுமாகி இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம் அல்லவா? ஒன்றை இங்கு எழுத வேண்டாம் என்று சொல்லும்போது அவ்விதயம் பயனற்றது என்றோ பிழையானது அன்றோ பொருளில்லை. அதற்கு விக்கிபீடியாவுக்கு வெளியில் இன்னொரு களம் இருக்க வேண்டும் என்பதே கருத்து. விக்கிபீடியா ஒரு reference source மட்டுமே. அதுவே source ஆக முடியாது.

கனட அரசுச் சேவைகள் குறித்த கருத்துக்களை இங்கு எழுதலாமல், விக்கி போன்ற ஒரு கட்டமைப்பை உடைய இன்னொரு தமிழ்த் தளத்தில் எழுத முடியும் அல்லவா? இது வரை அப்படி ஒரு தளம் இல்லையென்றால், அதற்கான ஒரு தூண்டுகோலாக கூட இங்கு உள்ள உரையாடல்கள் இருக்க கூடும். பல தளங்களிலும் சிதறிக் கிடக்கும் தகவல்களை ஆங்கில விக்கி ஓரிடத்தில் தொகுத்து வழி காட்டுகிறது. தமிழில் இது வரை பரந்த தகவல்தளங்கள் இல்லாததால் விக்கியில் தொடங்கி தனித்தனிக் களங்கள் இனி தான் உருவாகி பக்குவம் அடைய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, உமாபதி-இலங்கைப் பயனர்கள் அவர்கள் விரும்பும் வண்ணமும் உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்து செய்திகளுக்கு ஒரு விக்கி தளம் தொடங்கலாம் (விக்கிமீடியா தளம் அல்ல!). தியானலிங்கம் குறித்த கட்டுரை இங்கு எழுதப்பட வேண்டுமா என்று அலசப்படும்போது அது ஒரு ஆன்மிக விக்கி தளத்தை உருவாக்கத் தூண்டலாம். நிரோ, தரமான படங்கள் குறித்தே தற்போது எழுதி வருகிறார். அவரே தமிழில் வெளியான அத்தனை (குப்பை) படங்களுக்கும் கட்டுரை உருவாக்க முனைவாரானால், அது குறித்தும் உரையாட வேண்டி வரும். அந்த இடத்தில் கலைக்களஞ்சியத்தை ஒரு தரவுத் தளத்தில் இருந்து வேறுபடுத்தி காட்ட வேண்டி வரும். விமலா ராமன் குறிப்பிடத்தகுந்தவரா என்ற கருத்து எழுதும்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழ்சினிமா விக்கியா தளத்தில் இருந்து அவரைப் பற்றி எழுத முடியும்.

இது போன்ற தனித்தனி தளங்கள் வளர்ந்து மெருகடையுமானால், நாளை அவையே விக்கிபீடியாவுக்கான முறையான தகவல் ஆதாரங்களாகக் கூட இருக்க முடியும். இதுவும் தமிழ் இணையத்தின் ஒரு நல்ல வளர்ச்சியாகவே அமையும். அனைவரின் நோக்கமும் ஒன்று தான் - அது பயனுள்ள தகவல்களை மக்களுக்கு தமிழில் தர வேண்டும். ஆனால், அவை அனைத்தையும் விக்கிபீடியாவில் இருந்து தான் செய்ய வேண்டும் என்றில்லையே? தனிப்பட்ட வலைப்பதிவுகளுக்கே கூட முக்கியத்துவம் அளிக்கும் நிச்சயம் இது போன்ற பொருள் சார் விக்கி முயற்சிகளுக்கு கவனம் தரும்.

இன்னொரு விதயம், பசுமைக் கைகள் என்ற பெயர் இத்திட்டத்தை நடத்துபவர்களால் தரப்பட்டதா என அறிய ஆவல். பொதுவாக இது போன்ற திட்டங்களுக்கு கைகள் என்பதை விட கரங்கள் என்று தான் பெயர் வைப்பார்கள்--Ravidreams 21:17, 22 நவம்பர் 2006 (UTC)Reply

சமையல் குறிப்பு கூட பயனுள்ளது தான். அரசு அறிவிப்புகள் கூட தகவல் தருபவை தான். 
ஆனால், இவற்றை கலைக்களஞ்சியத்தில் தான் தர வேண்டுமா என்பது என் கேள்வி.

இல்லை.

விக்கிபீடியா ஒரு reference source மட்டுமே. அதுவே source ஆக முடியாது.

த.வி பொறுத்த வரையில் இங்கு நான் வேறு படுகின்றேன். எ.கா. மயூரநாதனால் தரப்படம் பல கட்டுரைகள் பெறுமதி வாய்த ஆக்கங்கள், அதாவது source. Encyclopedia வெறும் தகவல் சேர்ப்பு என்பது தவறு. Encylopedia வரலாற்றில், குறிப்பாக Encyclopedia of Britinica வில் துறை வல்லுனர்கள் தங்களுடைய துறைகளில் தந்த தகவல்களே அதன் தரத்துக்கு காரணம் எனப்பட்டது. French Encylopedia முன்னோடி Denis Diderot முற்போக்கான சிந்தனைகள் எப்படி அமைந்தன என்பதையும் இங்கு சுட்டுவத் நன்று. எனவே reference source க்கும் source க்கும் வித்தியாசத்தை நீங்கள் துல்லியமாக விளக்க வேண்டும். மேலும், தமிழில் நாம் பெரும்பாலும் எமது சொந்த ஆக்க கட்டுரைகளையே இடுகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.


தனி தனித் தளங்களை துடங்க சொல்வது அவ்வளவு பொருத்தமான ஆலோசனை அல்ல. இது தனி தனி கோயில்களை கட்டி கும்பிடலாம் தானே என்று சொல்வது போல இருக்கின்றது. இங்கு வந்து பாருங்கள் அதன் விளைவை, பொருள்-நேர விரயத்தை. எமக்கு கிடைக்ககூடிய வளத்தை ஒருமித்து செலித்தி ஓரளவு தரமான, ஒரு நல்ல உதாரணத்தை, பேண்தகு தளத்தை உருவாக்கிய பின்பு உங்களுடைய கருத்து பொருத்தமாக இருக்கலாம். இப்பொழுது எமது வளங்களை சேர்த்து உருவாக்கப்படவேண்டிய திட்டம் இது. காலப்போக்கில் பல விக்கிகள் தமிழில் எழலாம். இந்த விக்கியை நுட்பத்தை பயன்படுத்துவது ஓரளவு இலகுவே (எ.கா. http://www.tamilscitech.org/mediawiki/index.php?title=Main_Page). ஏற்கனவே நூலகம் திட்டம், tamil heritage, tamil linux போன்றவை இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன. தனிப்பட்ட தேவைகளுக்கு http://www.google.com/notebook நன்று. இங்கு நுட்பம் முக்கியத்துவம் பெறுவதில்லை, சமூகமே முக்கியத்துவம் பெறுகின்றது. ஆகையால், எமது வளங்களை சிதறடிக்காமல் இருப்பது முக்கியம்.

மேலும் பின்னர்...

--Natkeeran 22:13, 22 நவம்பர் 2006 (UTC)Reply

இணையத்தில் தமிழ் ஆதாரங்கள் இல்லாதது புரிந்துகொள்ளத்தக்கது தான். ஆனால், மயூரனாதன், பெரும்பாலும் நூலாதரங்களை காட்டி தான் எழுதுகிறார் என்று நினைக்கிறேன். ஆங்கில விக்கியில் first-hand research கட்டுரைகளை அங்கு சேர்க்கக்கூடாது என்று ஒரு கொள்கை உண்டு. இந்த கொள்கை தமிழ் விக்கிக்கும் பொருந்த வேண்டும். தகவல் உண்மையா இல்லையா என்று அறியும் வழி இல்லாதபோது உறுதிப்படுத்த இயலாத தகவல்களை இங்கு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே விக்கிபீடியாவின் நம்பகத்தன்மைக்கு நல்லது. எனவே தான் விக்கிபீடியா ஒரு reference source ஆக மட்டுமே இருக்க முடியும் என்று கூறினேன். Before publishing an information in wikipedia it should have been previously published elsewhere and peer-reviewed. Wikipedia cannot act as a peer-review journal.


கலைக்களஞ்சியத்துக்கு பொருத்தமில்லாத கட்டுரைகளை தனித்தளங்களில் இடச் சொல்வது எந்த விதத்திலும் வளங்களை சிதறடிப்பது ஆகாது. எல்லா கருத்துக்களுக்கும் ஒரே கூகுள் குழுவா இருக்கிறது? தனித்தனி கூகுள் குழுக்கள் இருப்பது போல் இதையும் கருதலாம். கலைக்களஞ்சியத்துக்குத் தேவை அற்ற கட்டுரைகளை விக்கியாக்கம் செய்வது, அது தேவையா இல்லையா என்று உரையாடுவது ஆகியவற்றால் தான் பிற பயனர்களின் நேரம் விரயமாகும்.


இன்னொரு சரியான களம் இல்லை என்பதற்காக விக்கிபீடியாவை எல்லாவற்றுக்குமான களம் ஆக்கிவிட முடியாது. விக்கிமீடியாவின் பிற திட்டங்களே அனைத்தையும் விக்கிபீடியாவில் உள்ளடக்க முடியாது என்பதால் வந்த விளைவே. தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்கு உள்ளும் பொருந்த முடியாத கட்டுரைகளுக்குத் தான் பிற தனித்தளங்களை தொடங்கச் சொல்கிறேன். அத்தளங்களும் gnu free documentation licenseன் கீழ் வரும் எனில் தாராளமாக அவற்றில் பொருத்தமானவற்றை நாமும் இங்கு எடுத்தாளலாம். இங்கிருந்து அவர்களும் எடுத்தாளலாம்.நன்றி.--Ravidreams 07:43, 23 நவம்பர் 2006 (UTC)Reply


உங்களுடன் கருத்துடன் அடிப்படையில் ஒத்து போகின்றேன். ஆனால் reference source என்றால் என்ன என்பதில் தான் பிரச்சினை. சில கட்டுரைகள் first hand research projects மாதிரி அமைவதை நீங்கள் அவதானிக்கலாம். அதாவது கட்டுரை உரையாடல்கள் மூலம் பலரின் பங்களிப்பின் மூலம் உருவாகின்றது. ஆனால் அவை விழிம்பு நிலைத் தலைப்புகள் இல்லை. மாற்றாக தமிழில் ஒரு புதுப் புலமாக இருக்கலாம், அல்லது தமிழில் அத்துறை சார்பான படைப்புகள் இல்லாமல் இருக்கலாம்.

encyclopedia என்பது வரைவிலக்கணமாக பலதரப்பட்ட/அனைத்த? துறைத் தகவல்களையும் ஒருங்கே கோர்த்து தர முனையும் ஒரு முயற்சி. எனவே எமது எல்லைகளை குறுகி அமைக்க தேவையில்லை. அதேவேளை முக்கியத்துவம் தரவேண்டிய தலைப்புகளையும் நாம் அடையாளம் காண வேண்டும்.

Wikipedia:தமிழ் விக்கிபீடியா இவை அன்று என்று ஒரு பட்டியல் வைத்திருக்கின்றோம். censorship board மாதிரி யாரும் செயல்படுவது தவிர்க்கப்படவேண்டும். எது "குப்பைப் படம்" என்று வரையறை செல்வீர்களா? திரையரங்கில் இலாபம் ஈட்டாத எல்லாம் தோல்விப் படமா? அப்படியானால் கலைப்படங்கள்?

இங்கு நாம் பொதுவான நடைமுறைகளை வகுப்பது கடினம். ஒரு case by case அடிப்படையிலேயே செயல்பட முடியும் என்று தோன்றுகின்றது. --Natkeeran 02:11, 24 நவம்பர் 2006 (UTC)Reply

பொதுவான நடைமுறை வகுப்பது கடினம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஒரு caseன் உரையாடல்கள் அடுத்த caseக்கான உரையாடலை எளிதாகவும் சுருக்கமாகவும் ஆக்கும். முன்மாதிரிகளை மேற்கோள் காட்டி முடிவெடுக்க முடியும்.
ஒரு தமிழ்நாட்டு ரசிகனால் ஓடிய நல்ல படம், ஓடிய குப்பை படம், ஓடாத நல்ல படம், ஓடிய கலைப்படம், ஓடாத கலைப்படம், ஓடாத குப்பை படம் ஆகியவற்றை எளிதில் இனங்காண முடியும். இதில் கடைசி வகையை கண்டிப்பாக விக்கிபீடியாவில் சேர்க்க கூடாது. எடுத்துக்காட்டுக்கு, இந்த ஆண்டு வெளிவந்த துள்ளுற வயசு, வஞ்சகன் போன்ற படங்கள் ;)
தமிழர் உணவுப் பழக்கங்கள் போன்ற விதயங்களில் நாம் பேச்சுப் பக்கத்தில் உரையாடி ஒரு கள ஆய்வு போல் செய்து கட்டுரையில் சேர்க்கலாம். இது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால், வரலாறு, அறிவியல் போன்ற பொருட்களில் உள்ள கருத்துக்களை வல்லுனர்களால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். அவற்றை நேரடியாக இங்கு இடுவது தவறு. எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஒன்றை கண்டுபிடிக்கிறார் என்றோ ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார் என்றோ கொண்டால், அதை முதலில் விக்கிபீடியாவில் செய்யக்கூடாது. அவரது துறை வல்லுனர்கள் புழங்கும் களங்களில் தான் வெளியிட வேண்டும். அதற்கு எழும் சாதக பாதகமான எதிர்வினைகளை கருத்தில் கொண்டு நடுநிலையுடன் முக்கியத்துவம் கருதி விக்கிபீடியாவில் வெளியிடலாம்.
நாள்தோறும் விதம் விதமான கின்னஸ் சாதனைகள் நிகழ்கின்றன. அவை எல்லாவற்றையும் விக்கிபீடியாவில் சேர்க்க முடியாது. wikipedia cannot be a record book. எனவே தான் இவ்வளவு மரம் நட்டார்கள் என்பதை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக என்னால் கருத இயலவில்லை. ஓரிரு ஆண்டுகள் கழித்து இத்திட்டத்தால் வெளிப்படையான பலன் இருப்பதாக தெரிந்தால் ஆவணப்படுத்தலாம்.

--Ravidreams 07:35, 24 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி, செய்திக்குறிப்புகளில் மற்றும் இணையத்தளங்களில் இருந்து தெரிவது என்னவென்றால் இது ஒரு நல்ல திடமான தொலைநோக்கு கொண்ட திட்டம். இதற்கு மாற்று ஆதாரங்களைத் தாரவிடத்து இந்த பக்கத்தை நீக்காது விடுதல் நன்று.
ஆனால், வரலாறு, அறிவியல் போன்ற பொருட்களில் உள்ள கருத்துக்களை வல்லுனர்களால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
அவற்றை நேரடியாக இங்கு இடுவது தவறு. எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஒன்றை கண்டுபிடிக்கிறார் 
என்றோ ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார் என்றோ கொண்டால், அதை முதலில் விக்கிபீடியாவில் செய்யக்கூடாது. அவரது 
துறை வல்லுனர்கள் புழங்கும் களங்களில் தான் வெளியிட வேண்டும். அதற்கு எழும் சாதக பாதகமான எதிர்வினைகளை 
கருத்தில் கொண்டு நடுநிலையுடன் முக்கியத்துவம் கருதி விக்கிபீடியாவில் வெளியிடலாம்.

முற்றிலும் ஏற்றுக் கொள்கின்றேன்.

--Natkeeran 01:18, 25 நவம்பர் 2006 (UTC)Reply

நற்கீரனின் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். கட்டுரையை அழிக்கவேண்டாம். தமிழில் கட்டுரையே இல்லை என்பது பலரது கவலை தரமான கட்டுரைகள் அமையவேண்டும் என்பதும் கவனிக்கவேண்டியதே. தமிழ்த் தளங்களில் நானறிந்த வரையில் தமிழ் விக்கிபீடியா மாத்திரமே தொடர்ச்சியாக மேம்ப்டுத்தப்பட்டுவருகின்றது. தமிழ் விக்கிபீடியா ஓர் சூப்பர் மாக்கட் போல எல்லாவிடயங்களிலும் கட்டுரை இப்பதே நல்லது. எந்தவொரு திட்டத்திலும் எதிர் மறையான விளைவுகள் இருக்கவே செய்யும். இதற்கு ஐக்கிய நாடுகளும் விதி விலக்கல்ல. எடுத்துக் காட்டாக வவுனியாவில் சிதம்பரபுரத்தில் ஓர் நலன்புரி நிலையாமானது நானறிந்த வரையில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக உள்ளது. இவர்களை ஆககுறைந்த பட்சம் வேறு ஓர் இடத்தில் மீள் குடியேற்றத்தன்னும் முடியவில்லை. இதற்கு சில அமைப்புக்கள் அவர்கள் மீளக் குடியேறுவது அவர்களின் விருப்பதின் படியேயே நிகழவேண்டும் என்று குறிப்பிட்டதே பிரதான காரணமாகும். அநேகமான திட்டங்களின் வெற்றியும் தோல்வியும் அதை நடத்துபவர்களின் பணிபுரியும் அமைப்பைவிட அவர்களின் சேவை மனப்பான்மையிலேயே தங்கியுள்ளது. இத்திட்டத்தைப் பொறுத்திருந்து பார்போம். தவிர புதிதாக இணைந்த ஜெயராமும் பங்களித்திருக்கின்றார் இவரின் ஆர்வத்தையும் கட்டுரையை அழிப்பதால் குறையக் கூடும்--Umapathy 09:35, 25 நவம்பர் 2006 (UTC)Reply

pardon my post in english. in browsing centre. i remove the delete request temporarily. i agree to natkeeran´s view that we can keep the article until some counter info on this project is got. however discussions here should be a reference for such article cases in future--Ravidreams 20:34, 25 நவம்பர் 2006 (UTC)Reply

இது தமிழ்நாட்டில் பரவலாக பத்திரிகைகள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் பரவலாக பேசப்படும் கவனிக்கத்தக்க திட்டம். ஆகவே இது விக்கிபீடியாவில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பக்கத்தை அழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பின்னர் இக்கட்டுரையை விரிவுபடுத்துகிறேன். -SriniG 05:54, 26 நவம்பர் 2006 (UTC)Reply

இது பசுமைக்கரங்கள் திட்டம் என்றே ஈஷா மையத்தால் அழைக்கப்படுகிறது.[1] அதனால் பக்கத்தை நகர்த்தியுள்ளேன். -SriniG 06:04, 26 நவம்பர் 2006 (UTC)Reply


Return to "பசுமைக்கரங்கள் திட்டம்" page.