பேச்சு:படிமுறைத் தீர்வு
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
- "Algorithm: அல்கோரிதம்: விதிமுறை, கணிமுறை, நெறிமுறை: ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறை அல்லது முழுமையானா வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள்." - கணிப்பொறி சொல் அகராதி
- படிமுறை - http://www.tcwords.com/
- செல்வா இந்தச் சொல்லை தமிழ்ப்படுத்துவது கூடிய விளக்கத்தை தரும். கணிமுறை நன்றாக இருக்கிறது.
- --Natkeeran 22:37, 4 டிசம்பர் 2008 (UTC)
- ஆல்கரிதம் என்பதைப் பல முறை நான் படிதீர்வு, படிதீர்வு முறை, படிமுறைத் தீர்வு என்பது போன்ற சொற்களால் ஆண்டுள்ளேன். படிமுறை அல்லது படிதீர்வு முறை முதலான சொற்களே நல்லவை. ஆனால், இங்கு ஒருவர் பெயரால் இச்சொல் அமைந்திருக்கின்றது என்பதால் அதனை அப்படியே ஆண்டிருக்கின்றேன். வழக்கத்தில் படிமுறை, படிதீர்வு முறை, ஆல்கரிதம் என்னும் எல்லாமும் ஈடான சொற்களாக ஆளலாம். 'டீசல் (இடீசல்) என்பதை நாம் அப்படியே எடுத்தாள்வது போலவே ஆல்கரிதம் என்னும் இதனையும் நினைக்கலாம். --செல்வா 22:55, 4 டிசம்பர் 2008 (UTC)
- It was translated into Latin in the 12th century as Algoritmi de numero Indorum (al-Daffa 1977), which title was likely intended to mean "Algoritmi on the numbers of the Indians", where "Algoritmi" was the translator's rendition of the author's name; but people misunderstanding the title treated Algoritmi as a Latin plural and this led to the word "algorithm" (Latin algorismus) coming to mean "calculation method".
இதன்படி அல்கரிதம் என்ற சொல் இலத்தீனின் "படிமுறைத் தீர்வு" என்ற சொல்லில் இருந்தே பிறந்திருக்கிறது. என்வே தலைப்பை படிமுறைத் தீர்வு என்று வைப்பதே பொருத்தம். நற்கீரன் சொல்வது போல மிகவும் எளிதானது, விளங்கக்கூடியது.--Kanags \பேச்சு 10:36, 5 டிசம்பர் 2008 (UTC)
- கனகு, எனக்கு உவப்பான செய்தியே. படிமுறைத் தீர்வு என்றோ படிமுறை என்றோ மாற்றலாம். ஆல்கரிதம் என்பது என்னென்ன சொல்வடிவங்களிலும் பொருள்களிலும் பயன்படுகின்றன என்று சிறிது பார்த்துவிட்டு, அச்சூழல்களுக்கும் பொருந்தி வருமாறு படிமுறை அல்லது படிமுறைத்தீர்வு என்னும் சொல்லையோ பிறிதொரு சொல்லையோ ஆளலாம். Algorithm, Algorithmic (எ.கா Algorithmic information theory), Algorithmics முதலியன முதலில் நினைவுக்கு வருவன.--செல்வா 13:51, 5 டிசம்பர் 2008 (UTC)
- படிமுறைத் தீர்வு நன்றாக இருக்கிறது. மாற்றவா. --Natkeeran 19:14, 19 டிசம்பர் 2008 (UTC)
- இன்னும் 2-3 பேராவது சரியென்று சொன்னால் நன்றாக இருக்கும்; படிமுறைத் தீர்வு என்னும் மாற்றத்தை நான் வரவேற்கிறேன். ஆல்கரிதம், அல்கரிதம் ஆகிய இரண்டுக்கும் வழி மாற்று வைத்திருக்கவும் வேண்டும்.--செல்வா 19:42, 19 டிசம்பர் 2008 (UTC)
- செல்வா...ஒரு முடிவுக்கு வர முடியுமா?--Natkeeran 01:55, 30 ஏப்ரல் 2009 (UTC)
சிவப்பு இணைப்புகளை நீக்கி கட்டுரை கேட்டுகொண்டபடி மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:50, 5 அக்டோபர் 2017 (UTC)