பேச்சு:பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்

சர்வதேச என்பதை பன்னாடு என்றும், விமானநிலையம் என்பதை வானூர்தி நிலையம் என்றும் எழுதுதல் நல்லது. ஆனால், அரசேற்புடன் சர்வதேச விமான நிலையம் என்று இருந்தால் மாற்ற இயலாது. உள்நாட்டு, பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் என்பது நல்ல சொல்லாட்சிகள்.--C.R.Selvakumar 12:50, 4 அக்டோபர் 2006 (UTC)செல்வாReply

செல்வா மன்னிக்கவும் 2002 ஆம் ஆண்டில் இலங்கைகு மீளத்திரும்பிய பின்னர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையமூடாகப் பயணிக்கவில்லை. எவ்வாறு எழுதினார்கள் என்று ஞாபகம் இல்லை. இணையத் தேடல்களும் சரியான் முடிவைத் தரவில்லை. வேறு பயனர்கள் அறிந்தால் இதைப் பற்றி அறியத் தரவும். நீங்கள் கூறிய தமிழ் நன்றாக இருப்பதால் ஓர் மீள்வழிநடத்தற் பக்கம் பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு உருவாக்கியுள்ளேன். --Umapathy 16:50, 8 அக்டோபர் 2006 (UTC)Reply

இலங்கை ஊடகங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் எனும் பதமே பாவிக்கப்படுகின்றது ஆகவே அதனை கைக்கொள்ள கேட்டுக்கொள்கின்றேன்,--கலாநிதி 17:11, 28 நவம்பர் 2006 (UTC)

நன்றி கலாநிதி, பக்கத்தை வழிமாற்றியுளேன் --Umapathy 18:19, 28 நவம்பர் 2006 (UTC)Reply


அண்மைய மாற்றங்கள்

தொகு

கட்டுரையின் உரையை முன்னும் பின்னுமாக மாற்றி எழுதி இருக்கிறேன். முன்னர் இருந்த உரையை படித்த போது எந்த விமான நிலையத்தில் பெயர் எது என்று புரிந்து கொள்ள குழப்பமாக இருந்தது. கட்டுரையில் தொடர்ந்து தகவல்களை சேர்க்கும் போது ஒரு கோர்வையாக சேர்த்தல் நலம். இல்லாவிட்டால், இலங்கைக்கு வெளியில் உள்ளோருக்கு இவ்விதயத்தை எளிதில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் தவிர்த்து பிற இடங்களில் சர்வதேச->பன்னாட்டு என்று மாற்றி இருக்கிறேன். கட்டுநாயக்கா, கட்டுநாயக்க - எது சரி?--Ravidreams 19:07, 28 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி கலாநிதி குறிப்பிட்டது போல் ஊடகங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் என்றே இலங்கைப் பத்திரிகைளில் அறியப்படுகின்றது அதையே நாமும் கையாளலாம். நான் தான் தவறுதலாக கட்டுநாயக்கா என்று எழுதுவிட்டேன். எதற்கும் வழிமாற்றுப்பக்கம் இருக்கட்டும்--Umapathy 09:08, 29 நவம்பர் 2006 (UTC)Reply

சரி, உமாபதி. ஆனால், கட்டுநாயக்கா, கட்டுநாயக்க - இந்த இரண்டு எழுத்துக்கூட்டல்களில் எது சரி?--Ravidreams 09:28, 29 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி பண்டாரநாயக்கா கூடுதல் பொருத்தம் போலத் தெரிகின்றது. எனது கருத்துகள் சரியோதெரியவில்லை. குறிப்பு: இது கொழும்பில் இருந்து வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதைக் கட்டுரையில் இருந்து நீக்கியுளேன். இதற்கு இப்பிரதேசம் கொழும்பில் இருந்து தென்மேற்காக இருப்பதே காரணம்--Umapathy 18:16, 29 நவம்பர் 2006 (UTC)Reply

உமாபதி, நான் விமான நிலையப் பெயரையோ கட்டுரைப் பெயரையோ மாற்றச் சொல்லவில்லை. எனக்கு கட்டுநாயக்கா, கட்டுநாயக் - இரண்டில் எது சரி என்று தெரியவேண்டும். அவ்வளவுதான். இது இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாத கேள்வியாகவும் கருதலாம்--Ravidreams 18:24, 29 நவம்பர் 2006 (UTC)Reply

மன்னிக்கவும் ரவி ஏதோ யோசனையில் பண்டாரநாயக்கவைப்பற்றி எழுதிவிட்டேன். கட்டுநாயக்கா எனக்குப் பொருத்தாமத் தெரிகின்றது கட்டுநாயக்க ஊடகங்களில் அறியப்பட்டது. பார்க்க http://www.virakesari.lk/business/view.asp?key=656 --Umapathy 18:31, 29 நவம்பர் 2006 (UTC)Reply

பன்னாட்டு/சர்வதேச

தொகு

மீண்டும் மீண்டும் இக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. பன்னாட்டு என்றால் multinational என்று தான் பொருளேயன்றி international என்ற பொருள் வரவில்லை. ஏதோ காரணத்தினால் சர்வதேச என்றெழுதுவது புழக்கத்தில் இருந்த போதிலும் அது வடமொழி என்பதால் அதை விட்டுவிட்டு, நாட்டிடை என்று கூறலாமே.

@செல்வா: இங்கு கருத்திடுகிறீர்களா?--பாஹிம் (பேச்சு) 15:31, 8 பெப்ரவரி 2022 (UTC)

ஆங்கிலத்தில் international என்றா; பல நாடுகளுக்கிடையே என்றும், multinational என்றால் பன்னாடுகளுடனான, பலநாடுகள் சேர்ந்தியங்கும் என்றும் global என்றால் உலகம் முழுவதுக்குமான என்று பொருள் (துல்லியமான பொருள் எனக் கொள்ளவேண்டாம், ஏறத்தாழ இவைதாம் பொருள்கள்). multinational என்பதைப் பொதுவாக தொழில்சார்ந்தும், international என்பதை அரசுகள், கவ்விசார்ந்த, ஆய்வு சார்ந்த கருத்தரங்குகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்துகின்றார்கள். international என்பதற்கு அனைத்துலக, என்றும் பொருள் ஆளப்படுகின்றது தமிழில். உலக, அனைத்துலக, பன்னாட்டு என்று பயன்படுத்தலாம். ஆங்கிலச்சொல்லோடு எல்லா இடங்களிலும் பொருந்தி வரவேண்டும் என்று கொள்ளத்தேவையில்லை. தமிழில் மட்டுமல்ல பிறமொழிகளிலும் ஒன்றுக்கு ஒன்று ஈடாகக் கொள்ளல் எல்லா இடங்களிலும் பொருந்து வாரா. பன்னாட்டு வானூர்தி நிலையம் பன்னாட்டுப் பறப்பகம் போன்றவாறு பயன்படுத்தலாம். --செல்வா (பேச்சு) 16:51, 8 பெப்ரவரி 2022 (UTC)

நன்றி, செல்வா. பொதுவாக multinational என்ற சொல் தொழில் அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகிறது. பறப்பகம் என்றால் aerodrome என்றெடுக்கலாமே.--பாஹிம் (பேச்சு) 01:42, 9 பெப்ரவரி 2022 (UTC)

Return to "பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்" page.