பேச்சு:பரப்பு விரிவுக் குணகம்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
β = ΔA/A*ΔT/K என்பதில் K என்பதற்குப் பதில் T என வருவதே சரியென மாற்றியிருக்கிறேன். கருத்துத் தெரிவிக்கவும்--Booradleyp1 (பேச்சு) 05:27, 4 சூன் 2013 (UTC)Reply

அன்புடையீர்,

தனிவெப்ப அலகில் T யும் K யும் வெப்பநிலையினைக் குறிக்கப் பயன் படுகின்றன./k என்பது ஒவ்வொரு கெல்வினுக்கும் என்னும் பொருளில் அமைந்தது.T என்பது தவறில்லாவிட்டாலும் குழப்பத்தை உண்டாக்கலாம்.அதனைத் தவிர்க்கவே K பயன்படுத்தப்பட்டது.

அருண்தாணுமாலயன்

விளக்கியமைக்கு நன்றி. நான் புரிந்து கொண்டது தான் தவறு /k என்பதில் / என்பதை அந்த வாய்ப்பாட்டில் வகுத்தலைக் குறிப்பதாக எண்ணி விட்டேன். இப்பொழுது நான் செய்த மாற்றங்களுக்குப் பின் பார்முலா சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து, K பயன்படுத்துமிடத்தில் அது குறித்த சிறு விளக்கத்தைச் சேர்த்து விடுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 11:10, 4 சூன் 2013 (UTC)Reply

சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். ஓரலகு வெப்பநிலை மாற்றம் என்பது எந்த வெப்பநிலை அளவுகோலினுடையதாகவும் இருக்கலாம். ஆனால் அறிவியலில் கெல்வின் பாகையே முறை. பொறியியலில் உலகின் மிகப்பெரும்பாலான நாடுகளில் செல்சியசு பாகை பயன்படுத்தப் படுகின்றது. ஓரலகு செல்சியசுப் பாகைக்கும் ஓரலகு கெல்வின் பாகைக்கும் அதிக வேறுபாடு கிடையாது (ஆனால் ஓரலகு பாரன்ஃகைட்டுப் பாகையோடு அதிக வேறுபாடு உண்டு). இந்த பீ'ட்டா என்னும் குணகம் ஒரு பாகை மாற்றத்துக்கானது. ஆகவே எண்/K என்று கூறுவது பொருத்தம். அதாவது பீ'ட்டாவின் பண்பலகு K-1 ஆகும் --செல்வா (பேச்சு) 12:50, 6 சூன் 2013 (UTC)Reply
Return to "பரப்பு விரிவுக் குணகம்" page.