பேச்சு:பரிசோதனை வகைப்பாட்டியல்

தாவரத்தொகுதியியல் (en:Systematics ) என்பதன் உட்பிரிவுகளில் இது ஒன்று. இதற்குரிய ஆங்கில கட்டுரை உருவாக்கப்படாமையால், இக்கட்டுரைக்கான ஆங்கில விக்கித்தரவுடன் இணைக்கவில்லை.--≈ உழவன் ( கூறுக ) 03:01, 20 சூலை 2013 (UTC)Reply

ஆங்கில விக்கியில் இதுவரை இல்லாத தலைப்பில் கட்டுரை உருவாக்கியுள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி, தகவலுழவன். இது குறிப்பாகச் செடியினங்களுக்கு மட்டுமான துறையா அல்லது அனைத்து உயிர்களுக்குமானதா? செடியினங்களுக்கு மட்டும் என்றால் செடியின என்றோ தாவரவியல் என்றோ தலைப்பில் குறிப்பிட வேண்டுமென நினைக்கிறேன். நீங்கள் தாவரத்தொகுதியியல் என்று குறிப்பிட்டு அடைப்பில் தந்திருக்கும் ஆங்கிலத்துறையைப் பார்த்தால் அனைத்து உயிர்களுக்குமானதாகத் தெரிகிறது. -- சுந்தர் \பேச்சு 08:02, 21 சூலை 2013 (UTC)Reply
இது உயிரியல் கோட்பாடே. தாவரவியலுக்கு உகந்தபடி பதிவு செய்தேன். தாவர என்ற முன்னொட்டு அவசியமெனின் இணைப்பதில் எனக்கு உடன்பாடே. கட்டுரையினை படிப்பவர், இயல்பாகவே இது தாவரங்களுக்கு என புரிந்து கொள்வர் என்றே எண்ணுகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 13:12, 21 சூலை 2013 (UTC)Reply
கட்டுரையைப் படிக்கையில் இது தாவரங்களைப் பற்றித்தான் உள்ளது எனத் தெரிகிறது, தகவலுழவன். ஆனால் செடிகளுக்கும் விலங்குகளுக்கும் மற்ற உயிர்களுக்கும் தனித்தனியாகக் இந்த வகைப்பாட்டியலைப் பற்றிய கட்டுரை எழுதக்கூடிய அளவுக்கு அவற்றினிடையே வேறுபாடுகள் உண்டென்றால் தனித்தனியாக உருவாக்கலாம். இல்லை இது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்றால் கட்டுரையின் அறிமுகப்பகுதியில் அவ்வாறு எழுதி தாவரங்களைப் பற்றிய சிறப்புத் தகவல்களை தனி உட்தலைப்பின்கீழ் தரலாம். அதை விளக்குங்கள். -- சுந்தர் \பேச்சு 13:20, 21 சூலை 2013 (UTC)Reply
Return to "பரிசோதனை வகைப்பாட்டியல்" page.