பேச்சு:பல் துலக்குதல்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic பல் விழக்கல், பற்கள் விழக்கல், பற்களை விழக்குதல்
பல் விழக்கல், பற்கள் விழக்கல், பற்களை விழக்குதல்
தொகுஎது சரி? --Natkeeran 20:36, 8 அக்டோபர் 2007 (UTC)
- பல் விளக்கல் அல்லது பல் துலக்கல். பல் விழக்கல் தவறு.--செல்வா 22:33, 8 அக்டோபர் 2007 (UTC)
பல் விளக்குதல் என்பது வழக்கு சொல் ஆகும். பல் துலக்குதல் என்பதே சரியானது என நான் கருதுகிறேன்..!−முன்நிற்கும் கருத்து பயனர்:Itzkaruna4wiki (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சரியெனில், கட்டுரை முழுவதும் நாம் துலக்குதல் என அழைப்போமே..?
- பல் துலக்கல் என்பதை முதன்மைப் படுத்தலாம்.--Kanags
- பல் துலக்கல் என்பதை முதன்மைப்படுத்துவதில் எனக்கு எந்த மாறுப்பும் இல்லை. நன்றாகவே இருக்கும். ஆனால் விளக்கல் என்றால் அழுக்கு நீக்கி தூய்மையாகி ஒளிவிடச் செய்தல் என்று பொருள். பாத்திரம் (/ஏனம்) விளக்கல், பல் விளக்கல் என்பதெல்லாம் அன்றாடம் பயிலும் தூய வடிவம் அதே நேரத்தில் இலக்கிய வடிவமும் ஆகும். ஒளிதரும் விளக்குக்கு ஏன் விளக்கு என்றால் இருள் நீக்கி ஒளிதருவதால். ஒருவருக்கு ஒரு கருத்துப் பொருளை விளக்குவதும், அவர் குழப்பம் நீங்கச்செய்வதாம். எல்லோருக்கும் துலக்கல் என்பது பிடித்து இருந்தால், அதனையே தயங்காது முதன்மைப் படுத்தலாம். இங்கு என் கருத்தைச் சற்று விளக்கினேன் --செல்வா 12:00, 9 அக்டோபர் 2007 (UTC)