பல் துலக்குதல்

பற்களை பற்தூரிகை, மரக் குச்சிகள் (ஆலும் வேலும்), அல்லது விரல்களை கொண்டு உரசி அழுக்கு போக தூய்மை செய்வது பல் விளக்கல் அல்லது பல் துலக்கல் ஆகும். அன்றாடம் காலை எழுந்தவுடன் பற்களை விளக்குவது மிகவும் நல்ல பழக்கங்களில் ஒன்று. தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். உறக்கம் (நித்திரை) கொள்ளும் முன்னும் பற்களை விளக்கல்/துலக்கல் நன்று. இரவு துயிலச் செல்வதர்க்கு முன் பல் துலக்குவது காலையில் துலக்குவதைக்காட்டிலும் சாலச் சிறந்தது. ஏனெனில், இரவு முழுவதும் வாய் சுத்தமாக இருப்பதால் தூங்கும் நேரம் கிரிமிகள் வளர்வது தடைபடுகிறது. ஆகையால் பற்களை விளக்கல் பற்சொத்தை மற்றும் பிற நோய்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் வராமல் தடுக்க உதவுகின்றது.

இப்போது பெரும்பாலான பற்பசைகளிலும் பல் சிதைவைத் தடுக்க புளோரைடு சேர்க்கப்படுகிறது. புளோரைடின் அளவு அதிகமாகும் போது ஒரு சிலருக்கு பற்கள் முழுவதும் வெள்ளை திட்டுக்கள் போல ஏற்படும். தொடர்ந்து புளோரைடு அதிகமானால் பழுப்பு நிறமாகவும், கருப்பு நிறமாகவும் பற்களில் பள்ளங்களும், ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவும் ஏற்படும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Home use of interdental cleaning devices, in addition to toothbrushing, for preventing and controlling periodontal diseases and dental caries". The Cochrane Database of Systematic Reviews 2020 (4): CD012018. April 2019. doi:10.1002/14651858.cd012018.pub2. பப்மெட்:30968949. 
  2. "Toothbrushes". www.ada.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  3. Wu, C. D.; Darout, I. A.; Skaug, N. (2001). "Chewing sticks: timeless natural toothbrushes for oral cleansing" (in en). Journal of Periodontal Research 36 (5): 275–284. doi:10.1034/j.1600-0765.2001.360502.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1600-0765. பப்மெட்:11585114. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1034/j.1600-0765.2001.360502.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_துலக்குதல்&oldid=4100410" இலிருந்து மீள்விக்கப்பட்டது