பேச்சு:பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் எனும் கட்டுரை பள்ளிகள் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய பள்ளிகள் எனும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பள்ளிக்கூடம் என்ற தலைப்பிலான கட்டுரையை இக்கட்டுரைக்கு வழிமாற்றலாமா? பள்ளிக்கூடம் என்று தமிழ்நாட்டில் புழங்கும் சொல் இலங்கை வழக்கான பாடசாலைக்கு ஒத்த பொருள் தருவது தானே!--ரவி (பேச்சு) 16:03, 4 நவம்பர் 2005 (UTC)Reply

பள்ளிக்கூடம் என்ற சொல்லைத்தான் இலங்கையிலும் சாதாரணமாகப் பேசும்போது பயன்படுத்துவோம். பாடசாலையென்பது பொதுவாக எழுத்து வழக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது. தலைப்புப் பள்ளிக்கூடமாக இருப்பதில் எனக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. ஆனால் வழிமாற்றுவதற்கு ஏற்கெனவே பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் கட்டுரை இருப்பதாகத் தெரியவில்லை. தலைப்பைப் பள்ளிக்கூடம் என்று மாற்றி, பாடசாலையிலிருந்து வழிமாற்றுக் கொடுக்கலாம். Mayooranathan 06:12, 5 நவம்பர் 2005 (UTC)Reply
பள்ளிக்கூடம் என்பதை விட பாடசாலையென்பதே மிக பொருத்தம். மேலும் கலைக்களஞ்சியத்தில் பேச்சு வழக்கு பயன்படுத்த கூடாது. - சுரேன்

தமிழ்நாட்டில் பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு இரண்டுமே பள்ளி, பள்ளிக்கூடம் என்பது தான். ஆகவே, பள்ளிக்கூடம் என்ற தலைப்பிலான பக்கத்தை பாடசாலை பக்கத்திற்கு வழிமாற்றியுள்ளேன். வெறும் பேச்சுவழக்காக இருந்தாலும் பிரபலமான வழக்காக இருக்கும் பட்சத்தில் அத்தலைப்பிலான பக்கங்களை எழுத்து வழக்கு பக்கங்களுக்கு வழிமாற்ற வேண்டும் என்பதை விக்கிபீடியா கொள்கையாக்க பரிசீலிக்கலாம்.--ரவி (பேச்சு) 15:44, 5 நவம்பர் 2005 (UTC)Reply

நீங்கள் சொல்வது சாதாரண கலைக்களஞ்சிய நடைமுறை மற்றும் ஆங்கில விக்கிபீடியா கொள்கைக்கும் முற்றிலும் மாறானது. மேலும் இது ஒரு கலைக்களஞ்சியம் இதில் சாதாரண பேச்சு வழக்கை பயன்படுத்துவது தவரானது. - சுரேன்

பாடசாலை என்ற சொல் எழுத்துவழக்கில் மட்டுமே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பள்ளிக்கூடம் அல்லது பள்ளி என்பது இலங்கையில் பேச்சு வழக்கில் மட்டும்தான் பயன்படுகிறது என்றில்லை. நான் தொடக்கப் பாடசாலையில் படிக்கும்போது படித்த இலங்கைக் கவிஞரொருவரின் குழந்தைப் பாடலொன்று அக்காலச் சிறுவர் மத்தியில் புகழ் பெற்றது.

காலைத்தூக்கிக் கண்ணிலொற்றிக் கட்டிக்கொஞ்சும் அம்மா
பாலைக்காய்ச்சிச் சீனிபோட்டுப் பருகத்தந்த அம்மா
....................................................
பள்ளிக்கூடம் விட்டநேரம் பாதிவழிக்கு வந்து
துள்ளிக்குதிக்கும் என்னைத்தூக்கித் தோளில்போடும் அம்மா.

இலங்கையில் பள்ளிக்கூடம் எழுத்துத் தமிழிலும் பயன்படுகிறது. எனவே இவ்விடயத்தில் பேச்சு வழக்கை தலைப்பில் பயன்படுத்துவது பற்றிய பிரச்சினையே கிடையாது. பாடசாலை என்ற சொல்லைத் தமிழ் நாட்டுத் தமிழர் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்னும் நிலை இருந்தால், பள்ளிக்கூடம் என்று தலைப்புக் கொடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.Mayooranathan 18:30, 6 நவம்பர் 2005 (UTC)Reply


வகுப்புகள்

தொகு

இலங்கையில் 13ஆம் வகுப்பு வரை உள்ளதா என்ன? தமிழ் நாட்டில் 12 வரை தான். இதை தெளிவுபடுத்தி எழுதலாம்.--ரவி (பேச்சு) 16:20, 5 நவம்பர் 2005 (UTC)Reply

இலங்கையில் 1ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையே அணைத்து பாடசாலைகளிலும் உள்ளது. - சுரேன்

தமிழ் விக்கிபீடியா உலகம் எங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் உரியது. எனவே இங்கு எழுதப்படும் கட்டுரைகள் கூடியவரை எல்லோருக்கும் பொருந்துவதாக இருக்கவேண்டும். உண்மையில் படசாலை போன்ற கட்டுரைகள் உலகம் முழுவதற்கும் பொருத்தமாக இருப்பதுதான் நல்லது. பாடசாலையில் உள்ள வகுப்புக்கள் பற்றி முன்னர் கட்டுரையில் இருந்த வசனம் இந்தியக் கல்விமுறைக்குப் பொருத்தமானது (பாலர் வகுப்புகளான LKG, UKG மற்றும் 1-12 வகுப்புகள்). இலங்கையில் இப்படித்தான் இருக்கிறது என்று வேறிடங்களுக்குப் பொருத்தமான உண்மைகளை அழித்துவிட்டு இலங்கைக்குப் பொருத்தமாக மாற்றி எழுதுவது முறையல்ல. இலங்கையில் எப்படியான முறை உள்ளது என்பதை இருப்பதுடன் சேர்த்து எழுதியிருக்கலாம். இது விடயமாக நான் ஆலமரத்தடி பகுதியிலும் முன்னர் எழுதியிருந்தேன். யாராவது எழுதியதை மாற்றுவதற்கு முன் தயவுசெய்து கலந்துரையாடவும். Mayooranathan 18:30, 6 நவம்பர் 2005 (UTC)Reply

பள்ளி எதிர் பள்ளிக்கூடம்

தொகு

தமிழ்நாட்டில் , சுருக்கமாக பள்ளி என்றே பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள் குறிப்பிடப்படுகின்றன. பள்ளி என்பதை முதன்மைத் தலைப்பாக வைக்கலாமா? இல்லை, பள்ளிவாசல், பள்ளியறை என்பவையும் இருப்பதைக் கொண்டு பள்ளி என்பதை வழிமாற்றுப் பக்கமாக வைத்திருக்கலாமா?--Ravidreams 11:40, 17 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பள்ளிக்கூடம்&oldid=3960744" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பள்ளிக்கூடம்" page.